Load Image
dinamalar telegram
Advertisement

தாய்லாந்து விமான நிலையத்தில் குலாப் 'ஜாமூன்' விருந்தளித்த இந்தியர்

பாங்காக் :தாய்லாந்து சென்ற இந்திய பயணி குலாப் ஜாமூன் எடுத்து செல்ல விமான நிலைய அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, அதை அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் வினியோகித்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் என்ற பயணி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவுக்கு விமானம் வாயிலாக சென்றார். விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது, அவரது கைப்பையில் இருந்த, 'டின்' குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

'இது குலாப் ஜாமூன் என்ற இனிப்பு வகை' என அவர் விளக்கம் அளித்தார். 'இது போன்ற பொருட்களை கைப்பையில் எடுத்து செல்ல பாதுகாப்பு விதிகளில் அனுமதியில்லை' என அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இது போன்ற நேரங்களில், அந்த பொருட்களை குப்பை தொட்டியில் வீசுவதோ அல்லது விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு வருவதோ தான் வழக்கமாக நடக்கும். ஆனால் ஹிமான்ஷு தேவ்கன் மாற்றி யோசித்தார். அந்த டின்னை பிரித்து, அதில் இருந்த குலாப் ஜாமூனை விமான நிலைய அதிகாரிகளுக்கு வினியோகிக்க துவங்கினார். முதலில் தயங்கியவர்கள் பின்னர் இனிப்பை சாப்பிட்டுவிட்டு ருசியாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை, 11 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.



வாசகர் கருத்து (5)

  • konanki - Chennai,இந்தியா

    பிராமணர்கள் ஏழை மாணவர்களை படிக்க விடாமல் தடுக்கும் சூழ்ச்சி. பெரியார் சொன்னது போல பிராமணர்களை தமிழ் நாட்டை விட்டு அன்றே வெளியே துரத்தி இருந்தால் இந்த மாதிரி நடந்திருக்குமா? முன்னாள் மத்திய அமைச்சர் 2ஜி ராஜா அறிக்கை வெளி வரும்

  • konanki - Chennai,இந்தியா

    இளவரசரின் பட வேலையை கவனிக்கவே குன்றிய கல்வி அமைச்சருக்கு நேரம் போதவில்லை. அவரைப் போயா இதெல்லாம் பார்க்க சொல்வது ?

  • konanki - Chennai,இந்தியா

    அந்த 2 ஆசிரியைகளுக்கும் நல்லாசிரியர் விருது உறுதி. அந்த தலைமை ஆசிரியருக்கு அண்ணா விருது அல்லது கலைமாமணி விருது நிச்சயமாக கிடைக்கும். திருட்டு டுபாக்கூர் டாஸ்மாக் திராவிஷ தீயசகதியின் ஆட்சியின் லட்சணம் இது . இன்னும் நிறைய இருக்கிறது மக்களே

  • Fastrack - Redmond,இந்தியா

    இப்போ வூருகாயெல்லாம் கொண்டு சென்றால் அமெரிக்க விமான நிலையங்களில் கண்டுகொள்வதில்லை

  • அப்புசாமி -

    இதுக்கெல்லாம் ரூல்ஸ் இடம் கொடுக்காது. பாவம். அவிங்களும் பஞ்சத்தில் அடிபட்டு இருக்காங்க போலிருக்கு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement