Load Image
Advertisement

தேசம் போற்றும் தியாகி திருப்பூர் குமரன்.

1932 ம் ஆண்டு ஜனவரி 10 ம்தேதி
திருப்பூர் ஒரு தியாக வரலாறு படைக்க காத்திருந்தது.
இன்னுயிர் எனும் தன்னுயிர் தந்து அந்த தியாக வரலாற்றின் நாயகரானவர் திருப்பூர் குமரன்.
குமாரசாமியாக இருந்தவர் பிரிட்டிஷ் போலீசாரின் குண்டாந்தடியால் உயிர்போகும் நிலைக்கு தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்த போதும் தான் கொண்டுவந்த இந்திய தேசியக்கொடியை விட்டுவிடாமல் உயர்த்திபிடித்ததனால் இன்று கொடிகாத்த குமரனாக நம் பேச்சிலும் மூச்சிலும் கலந்துள்ளார்.அவரது 118 வது பிறந்த நாள் இன்று

நாம் எத்தனையோ தேச தலைவர்களின் வரலாற்றைப் படித்துள்ளோம் ஆனால் கொடிகாத்த குமரனின் வரலாறு கண்ணில் நீரை வரவழைக்கும் வரலாறாகும்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து தலைச்சுமையாகவே தான் நெய்த துணிகளை நகரத்துக்கு சுமந்து சென்ற விற்பனை செய்துவந்தார் அதில் வருமானம் இல்லாததால் திருப்பூருகு இடம் பெயர்ந்து அங்கு ஒரு கடையில் கணக்கு எழுதும் பணியாளரானார்.
சிறுவயது முதலே மகாத்மாவின் பேரில் ஈர்ப்பு கொண்ட அவர் காந்தியின் போதனைகளை ஏற்று வழிநடக்கவும்,மற்றவர்களை வழிநடத்தவும் திருப்பூரில் ‛தேசபந்து இளைஞர் மையத்தை' துவங்கி அதன் மூலம் தேசபக்தர்களை ஒருங்கிணைத்தார்.எப்போதும் கதராடை,காந்திகுல்லா என்று தோற்றத்தை மாற்றிக்கொண்டார்.
தேசபந்து இயக்கத்தின் மூலம் சுதேசி சிந்தனைகளை இளைஞர்களிடம் விதைத்தார் அதுபற்றி விவாதித்தார்.
பிரிட்டீஷ் போலீசாரின் பார்வை இவர் மீது விழுந்தது ‛இவன் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்' சந்தர்ப்பம் கிடைக்கட்டும் என்று காத்திருந்தது
அதற்கான சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்த்தது
நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அறைகூவல் விடுத்தார் அவரது அழைப்பை ஏற்று ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பிரிட்டிஷாருக்கு எதிரான ஊர்வலமும் நாடு முழுவதம் நடத்தினர்..
இந்த ஊர்வலம் நடந்தால் மக்கள் எழுச்சி பெறுவர் என நினைத்து ஊர்வலத்திற்கு பிரிட்டிஷ் போலீசார் தடைவிதித்தனர், திருப்பூரில் இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி நடத்த இருந்தவர்களை போலீசார் முன்கூட்டியே கைது செய்தனர்.தலைமை இல்லாததால் ஊர்வலம் நடக்காது என்று எண்ணினர் ஆனால் உறுப்பினரான குமரன் கொடி பிடித்து இளைஞர்களை ஒன்று திரட்டிக்கொண்டு அறிவித்த இடத்தில் இருந்து ஊர்வலத்தை துவுக்கினார்.
போலீசார் வழிமறித்தனர் திமிறிக்கொண்டு குமரன் முன்னேறினார் சுற்றிவளைத்த போலீசார் குமரன் தலைமையில் வந்தவர்களை லத்தியால் அடித்து விரட்டினர், குமரன் மீது மட்டும் கொண்டிருந்த வெறுப்பு, பகைமை காரணமாக வெறுமனே தடியால் அடிக்காமல் வெறிகொண்டு தாக்கினர் அடி பொறுக்காமல் ரத்தம் கொட்ட கொட்ட தரையில் விழுந்தவரை பூட்ஸ் காலால் உதைத்து துவம்சம் செய்தனர் இது அத்தனையையும் தாங்கிக் கொண்ட குமரன், கையில் பிடித்திருந்த கொடியை மட்டும் விடாமல் உயர்திப்பிடித்தபடி ‛வந்தே மாதரம்' என்று விடாமல் முழங்கினர் இதன் காரணமாக இன்னமும் வெகுண்ட் போலீசார் முன்னிலும் வேகமாக தாக்கினார் குமரன் மயங்கிவிழுந்தார் வாய் மட்டும் வந்தே மாதரம் என்று முணுமுணுத்தபடி இருந்தது
ரத்த சகதியில் கிடந்த குமரனை கிட்டத்தட்ட ரோட்டில் இருந்து சுரண்டி எடுக்காத குறையாக எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்,மறுநாள் நினைவு திரும்பமாலே குமரனின் உயிர்பிரிந்தது.அப்போது அவருக்கு வயது 28 தான்.இளம் மணைவி ராமாயி செய்தறியாது திகைத்து போய் நின்றார் கண்ணீர் வற்றிப்போகும் அளவிற்கு அழுது தீர்த்தார்.
தகவலறிந்து மகாத்மா காந்தி நேரில் வந்து குமரனுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றார் , ‛கொடி காத்த குமரனாய்' நாடு அவரை பார்த்தது, வாழ்த்தியது தியாகத்தை போற்றியது.
ஒரு உன்னதமான விடுதலைப் போராட்ட தியாகியாய் அடையாளம் காட்டியதன் மூலம் திருப்பூர் நகரம் இன்று தனிப்பெருமை பெற்றுத்திகழ்கிறது.
திருப்பூர் குமரன் போன்றவர்களின் தியாக வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லுவோம் தேசம் காப்போம்
ஜெய்ஹிந்த்!
-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (3)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  வேதனையான தருணம் அந்த பெண் ராமாயிக்கு , வணங்குகிறேன் இருவரையும்

 • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

  தன் இளம் மனைவியை விட்டு விட்டு இறந்து விட்டார். மனைவி வாழ்நாள் முழுவதும் தனி மனிஷியாகவே தான் நம்மோடு வாழ்ந்து மறைந்தார். இன்றைய அரசியல் வாதிகளுக்கு இதை சொல்லிய பிறகு 100 ரூபாய் பொருளை 1926 ரூபாய் என கணக்கு காட்டி திருடுவான். அவன் குடும்பம் வளர்ச்சி அடையும் என நம்புலாமா ?

 • Sankaran - chennai,இந்தியா

  திராவிடம் , கிறிஸ்துவ மிசினரிகள் , சீமான், குருமவளவன் , குமரனை பத்தி என்னிக்காவது பேசி இருக்கிறார்களா?.. இன்றய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்..

 • chakra - plano,யூ.எஸ்.ஏ

  ,,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement