Load Image
Advertisement

அதிகாரிகளுக்குள்ளே சத்தம்...: ஆளும்கட்சிக்குள்ளே நடக்குது யுத்தம்!

ஆயுதபூஜைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக, வண்டியை எடுத்துக் கொண்டு, சித்ராவும், மித்ராவும் நகர்வலம் கிளம்பினர். டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு, கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த மித்ரா கடுப்பாகி புலம்ப, அவள் தோளை அழுத்தி சமாதானப்படுத்தி பேசினாள் சித்ரா...

''மித்து! நம்ம ஊரு மக்களுக்கு இனிமே இதுதான் நிரந்தரம்...கமிஷனுக்காக பாலம் பாலமா கட்டுறாங்க. மெட்ரோ ரயில் மாதிரி ஒரு மக்கள் போக்குவரத்துத் திட்டத்தைக் கொண்டு வர, எந்த கவர்மென்ட்டும் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. அவுங்க 10 வருஷம் ஓட்டுனது மாதிரி, இவுங்க அஞ்சு வருஷத்தை அசால்ட்டா ஓட்டிருவாங்க!'' அவள் பேசி முடிப்பதற்குள், குறுக்கிட்டுப் பேசினாள் மித்ரா...''அக்கா! அதெல்லாம் விடுங்கக்கா...சென்னைக்கு ரிப்பன் பில்டிங் மாதிரி எவ்ளோ பெரிய பில்டிங்ல மாநகராட்சி ஆபீஸ் இருக்கு. இங்க பாருங்க...இவ்ளோ டிராபிக்ல, இந்த இடத்துல கார்ப்பரேஷன் ஆபீஸ் இருக்கு. இதைக் கொண்டு போய், வேற எங்கேயாவது பெருசா ஒரு இடத்துல கட்டுனா, இங்க ஒரு மல்டி லெவல் பார்க்கிங் கட்டலாம். ரோட்டை அகலமாக்கலாம். எதையாவது யோசிக்கிறாங்களா?''''வேணும்னா பாரு மித்து! இந்த அஞ்சு வருஷத்துக்கும் கோயம்புத்துார்ல உருப்படியா ஒரு வேலையும் நடக்கப் போறதில்லை. மெட்ரோ ரயில், செம்மொழிப்பூங்கா, வெஸ்டர்ன் பை-பாஸ் எந்த வேலையும் முடியாது!'' என்று கொந்தளிப்போடு பேசினாள் சித்ரா.அதற்குப் பலமாகத் தலையாட்டிய மித்ரா, கார்ப்பரேஷன் மேட்டரையே தொடர்ந்தாள்...''இந்த ஆபீசர்கள் ஆடுற ஆட்டம்தான் ஓவரா இருக்குக்கா...கார்ப்பரேஷன்ல துாய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக் அறிவிச்சவுடனே, ரெண்டு தடவை கூப்பிட்டு ஆபீசர்கள் பேசிருக்காங்க. அப்போ சில ஆபீசர்கள், 'உங்களையெல்லாம் கூப்பிட்டுப் பேசுறதே பெரிய விஷயம்'கிற மாதிரி பேசுனாங்களாம். அதுதான் ஸ்டிரைக்குக்கு மெயின் ரீசன்னு சொல்றாங்க!''''இந்த பிரச்னை இவ்ளோ பெருசாகுறதுக்குக் காரணமே, கமிஷனர்தான்னு சொல்றாங்க. கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வருஷமும், கலெக்டர்தான் சம்பளம் 'பிக்ஸ்' பண்ணனும். இதுவரைக்கும் இருந்த கமிஷனர் எல்லாம், கலெக்டர் நிர்ணயிக்கிற சம்பளத்தை ஒட்டி, அவுங்க நிதிநிலைக்கு ஏத்தது மாதிரி சம்பளத்தைக் கூட்டுவாங்க...!''''இவரு என்ன பண்றாரு?''''இளரத்தம்ல...அதான் 'கலெக்டர் நிர்ணயிக்கிற சம்பளத்தைக் கொடுக்கணும்னு கட்டாயமில்லை. எனக்கு எங்க டைரக்டர் சொல்லணும்'கிறாராம். அதாவது கலெக்டர் பெருசா, கமிஷனர் பெருசான்னு ரெண்டு பேருக்கும் இடையில 'ஈகோ' ஓடுது. இதுல பாவம் ஊரைச் சுத்தம் பண்ற துாய்மைப் பணியாளர்கள் சிக்கி அல்லாடுறாங்க. நேத்து கலெக்டராபீஸ் வந்து கலெக்டர்ட்டயும் கம்பிளைன்ட் பண்ணிட்டாங்க!''''ஓ! சூப்பர்...அவர் என்ன சொன்னாராம்?''''அதை அப்புறம் சொல்றேன்...இவர் இப்படிச் சொன்னதால, மாவட்டத்துல இருக்குற மத்த நகராட்சி, பேரூராட்சிகள்லயும் சம்பளத்தைக் கூட்டாம வச்சிருக்காங்க. அதனாலதான் பிரச்னை பெருசா வெடிச்சிருச்சு. நேத்து இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட கலெக்டர், 'கார்ப்பரேஷன்ல சம்பளத்தை அதிகப்படுத்தலைன்னா, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் மூலமா, அதை நடைமுறைப்படுத்துவேன்'னு சொல்லீட்டாராம்!''''சபாஷ்! சரியான போட்டி...!''''இதுல இன்னொரு அரசியலும் இருக்கு மித்து! துறை அமைச்சருக்குக் கெட்ட பேரை ஏற்படுத்தணும்னே, கமிஷனரை இப்பிடிப் பண்றதுக்கு ஒரு விதமான அரசியல் அழுத்தம் தந்திருக்கிறதா ஒரு பேச்சு ஓடுது...ஆக மொத்தத்துல, இப்போ அதிகாரிகள் ஆட்சிதான் நடக்குது!''சித்ரா சொன்னதைக் கேட்ட மித்ரா, தனக்குத் தெரிந்த அடுத்த தகவலை ஆரம்பித்தாள்...''இதை விடக் கொடுமை, கலெக்டராபீஸ்ல நடக்குதுக்கா...அங்க ஒரு ஆபீசர், தன்னைப் பத்தி கம்பிளைன்ட் பண்ணுன விவசாயிகள் மேல, ஆனைமலை மாசாணியம்மன் கோவில்ல மிளகாய் அரைச்சுப் போட்ருவேன்னு மெரட்டிருக்காரு!''மித்ரா முடிப்பதற்குள் ஆச்சரியத்துடன் 'என்ன மித்து சொல்ற?' என்று சித்ரா கேட்க, அந்த விவகாரத்தை விளக்கினாள் மித்ரா...''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல உழவர் சந்தைகளைக் கவனிக்கிற, வேளாண் விற்பனைத்துறையில துணை பொறுப்புல அழகான வைகைப்புயல் பேருல, ஒரு ஆபீசர் இருக்காரு. ஒவ்வொரு மாசமும் நடக்குற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்துல, உழவர்சந்தைகளைப் பத்தி ஏகப்பட்ட புகார்களை விவசாயிகள் அடுக்குறாங்க!''''ஆமா! உண்மைதான் மித்து...'நம்ம ஊரு உழவர் சந்தைகள்ல வியாபாரிகள் ஊடுருவல் அதிகமாயிருச்சு. அரசு பஸ்கள்ல காய்கறி கொண்டு வர அனுமதிக்கிறதே இல்லை, தொண்டாமுத்துார்ல உழவர் சந்தை கேட்டோம்; அதையும் பண்ணலை'ன்னு நிறையா சொல்றாங்களே...அதுக்கு என்ன இப்போ?''''இந்த பிரச்னைக்கெல்லாம் அந்த ஆபீசர்தான் தீர்வு காணனும்...ஆனா அவரு எந்த நடவடிக்கையுமே எடுக்குறது இல்லையாம். ஒவ்வொரு கூட்டத்துலயும் அவரைப் பத்தி, விவசாயிகள் குறை சொல்றப்ப, டி.ஆர்.ஓ., மேடம் உள்ள புகுந்து அவரைக் காப்பாத்துறாங்களாம். போன கூட்டத்துலயும் இதே தான் நடந்திருக்கு. விவசாயிகள் இந்த முறை ரொம்பவே கொந்தளிச்சிட்டாங்க!''''அதனால கூட்டத்துலயே இதைச் சொல்லீட்டாரா?''''இல்லையில்லை...கூட்டத்துக்கு வெளியே வந்து சிவப்புத்துண்டு போடுற விவசாயிகள் சங்கத்து நிர்வாகி கிட்ட, அந்த ஆபீசர் 'என்னையையே டார்கெட் பண்ணிப் பேசுறீங்க'ன்னு சண்டை போட்ருக்காரு. ரெண்டு பேருக்கும் பெரிய வாக்குவாதம் ஆயிருச்சு. காரசாரமா பேச்சு வளர்ந்தப்பதான், அந்த ஆபீசர், 'நான் ஆனைமலை மாசாணியம்மன் கோவில்ல, மிளகாய் அரைக்கப்போறேன்'னு சொல்லிருக்காரு!''மித்ரா சொன்னதைக் கேட்டுச் சிரித்த சித்ரா, நிஜமான வருத்தத்துடன் அடுத்த விஷயத்தைப் பகிர்ந்தாள்...''நம்ம மாவட்டத்துல விவசாயிக நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு மித்து! பரம்பிக்குளம் அணை உடைஞ்சு 6 டி.எம்.சி., தண்ணி வேஸ்ட்டாப் போச்சு. மாவட்டம் முழுக்க மண் திருட்டு ஜோரா நடக்குது. உழவர் சந்தையில ஆயிரம் பிரச்னை...இப்போ டியூகாஸ் சொசைட்டியோட உரம் தயாரிக்கிற லைசென்சை ரத்து பண்ணீட்டாங்க!''''ஆமாக்கா! எனக்கே பெரிய ஆச்சரியம்...பல வருஷமா நல்ல பேரு வாங்குன சொசைட்டியாச்சே...டியூகாஸ் தயாரிக்கிற உரத்துக்கு, விவசாயிகள்ட்ட பெரிய டிமாண்ட் இருக்கும். விலையும் குறைவு...அதை ஏன் ரத்து பண்ணுனாங்களாம்?''''ஏதோ 10 டன் ஸ்டாக் அதிகமா வச்சிருந்ததை, இன்ஸ்பெக்சன்ல கண்டுபிடிச்சிட்டாங்களாம். அதை ஒரு பெரிய குத்தமா கலெக்டரும் சொல்றாரு...இதுலயும் ஒரு சதி நடக்குறதா விவசாயிகள் பேசுறாங்க...சில உர நிறுவனங்களுக்கு ஆதரவா, அதிகாரிகள் செயல்படுறாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு. ரோடுகளைப் பார்க்குற ஆளும்கட்சி வி.ஐ.பி., பிரஷர் தந்ததாலதான், அதிகாரிகள் இப்பிடிப் பண்றாங்கன்னு ஒரு தகவல் இருக்கு!''சித்ரா பேசும்போது, பயங்கர சத்தத்துடன் ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் கடந்ததைப் பார்த்த மித்ரா, கோபத்துடன் அடுத்த டாபிக்கை ஆரம்பித்தாள்... ''வரவர சிட்டிக்குள்ள இந்தப் பசங்க அலும்பு தாங்கலைக்கா...அதுலயும் காலேஜ்பசங்க போதையில பண்ற சேட்டை ரொம்ப அதிகமாயிட்டு இருக்கு...போலீஸ் என்னதான் பண்றாங்கன்னு தெரியலை!''''அவுங்களும் ஏதேதோ பண்றாங்க...முந்தா நாளு கூட, இடையர் வீதியில கதிர் அரிவாளை வச்சு, ரோட்டுல கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி, வீடியோ போட்ட பசங்களை அரெஸ்ட் பண்ணிருக்காங்களே...முதல்ல இந்த மாதிரிப் பசங்களை காலேஜ்ல இருந்து டிசி கொடுத்து அனுப்பணும். டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் பண்ணனும்!''''நம்ம ஊரு ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல காசிருந்தாப் போதும்...யாருக்கு வேணும்னாலும் லைசென்ஸ் வாங்கிரலாம். அதுலயும் சமீபகாலமா மறுபடியும் புரோக்கர்கள் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்குது. ஜே.டி.சி., இன்சார்ஜ் ஆபீசர் இங்க எட்டியே பாக்குறதில்லை. ரெண்டு ஆபீஸ்களுக்கு ஒரே ஆர்.டி.ஓ., இருக்காரு. தாறுமாறு வசூல்ல டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் பேரே நாறிட்டு இருக்கு!''''வசூல்னதும் ஞாபகம் வந்துச்சு...மதுக்கரை ஹைவேஸ்ல பேட்ரோல் போலீஸ் பண்ற வசூல் ரொம்ப அதிகமாயிருச்சாம்...ரெண்டு நாளைக்கு முன்னால, ஒரு ஆக்சிடெண்ட் நடந்திருக்கு. அதுல காயமடைஞ்ச ஒருத்தர்ட்ட, 'எங்களைக் கவனிச்சிட்டு ஆஸ்பத்திரிக்குப் போங்க'ன்னு சொல்லிருக்காங்க. எஸ்.பி., அந்தப் பக்கம் ஒரு ரவுண்ட் அடிச்சா இதெல்லாம் தெரியும்!''''வசூல்ராஜாக்களைப் பத்தி நீ சொல்ற...நம்ம பள்ளிக்கல்வித்துறையில, வசூல்ராணியா வலம் வந்த ஒரு ஆபீசருக்கு, ஆதரவா எத்தனை ஆர்டர் போடுறாங்க தெரியுமா?''''ஓ...மெட்ரிக் ஸ்கூல்களைப் பாக்குறப்பவும், எஸ்.எஸ்.குளத்துல டி.இ.ஓ.,வா இருக்கிறப்பவும் வசூல் தட்டி எடுத்தாங்களே...அவுங்களைத்தான் இப்போ தனியார் பள்ளிகளுக்கான டி.இ.ஓ.,வா போடப்போறதா தகவல் வந்து, நம்ம பேசுன பிறகு, பொள்ளாச்சி இடைநிலைக் கல்வி டி.இ.ஓ.,வா மாத்தீட்டாங்களே...இப்போ என்ன ஆச்சு?''''இப்போ அவுங்களை மாநகராட்சி கல்வி அலுவலராப் போட்ருக்காங்க...காசு வாங்குற ஆபீசர்ட்ட காசை வாங்கிட்டு, இன்னும் எத்தனை ஆர்டர்தான் போடுவாங்கன்னு தெரியலை...இனிமே கார்ப்பரேஷன் ஸ்கூல்கள் பாடு திண்டாட்டம்தான்!''மித்ரா தகவல் சொல்லிக் கொண்டிருக்கும்போது, மாநகராட்சி வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, சித்ரா ஆரம்பித்தாள்...''மித்து! இந்த காந்தி ஜெயந்திக்கு காங்கிரஸ்காரங்க தனித்தனி கோஷ்டியாப் போயி, காந்தி சிலைக்கு மாலை போட்ருக்காங்க. அதுலயும் கருமத்தம்பட்டி காங்கிரஸ்காரங்க, ஞாயித்துக்கிழமை பூட்டிக்கிடந்த கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்துக்குள்ள ஏறிக்குதிச்சுப் போயி, காந்தி சிலையை சுத்தம் பண்ணிருக்காங்க. அப்புறம் ஊழியர்கள் அவசர அவசரமா கதவைத் திறந்து விட்டாங்களாம்!''''அக்கா! நம்ம மாவட்டத்தல ஏழு பஞ்சாயத்து பிரசிடெண்ட்களோட செக் பவரை, கலெக்டர் கேன்சல் பண்ணிருக்காரு தெரியுமா...கோவிட் காலத்துல தடுப்புப் பணிக்கு மருந்து வாங்குனதுல முறைகேடுன்னு சொல்றாங்க. ஆனா, பல பஞ்சாயத்துகள்ல போலியா பில்லே தயாரிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிருக்கு. அதே மாதிரி, ஒரு சில பிரசிடெண்ட்கள், தங்களோட பவரை மீறி, பில்டிங் அனுமதி கொடுத்திருக்காங்க!''''அப்பிடின்னா இந்த நடவடிக்கை சரிதான்...அதே மாதிரி இல்லீகலா டாஸ்மாக் பார் நடத்த அனுமதிக்கிற ஆபீசர்கள் மேலயும், நடவடிக்கை எடுக்கணும்...அன்னுார்ல மட்டும் நாலு பார் இப்பிடி நடக்குறதுல, கவர்மென்ட்டுக்கு 10 லட்ச ரூபா லாஸ்...மாவட்டத்துல ஏகப்பட்ட பார் இப்பிடி நடக்குது...எவ்ளோ இழப்புன்னு பார்த்துக்கோ!''சித்ரா சொல்லி முடிப்பதற்குள் கடை வந்து விடவே, வண்டியை 'பார்க்கிங்'கில் நிறுத்தி விட்டு இருவரும் கடைக்குள் நுழைந்தனர்.



வாசகர் கருத்து (2)

  • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

    திமுக அடிவருடிகள் எல்லாமே- இந்துக்களை நோக்கி திரும்ப திரும்ப சொல்வது-இது பெரியார் மண்-இங்கே சனாதனத்திற்கு இடமில்லை-அதாவது தாலிய அறுத்துட்டு யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம்-எழுந்துக்கலாம்-எத்தனை மனைவி-துணைவி -இணைவி-அணைவி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்-பெனாமி பெயரில் சொத்துக்களை சேர்க்கலாம்-இஸ்லாம் கிறிஸ்துவத்தை பௌத்தத்தை தவிர எந்த கலாச்சாரத்தையும் பின்பற்றக்கூடாது. இந்துமதம் என்று ஒன்றில்லை. பிராமணன் தான் இந்து. அவன் தான் பரம எதிரி-RSS போன்ற இயக்கத்தினால் அவன் காப்பாற்றப்படுவான்-அதனால் அதை தேசத்துரோக இயக்கம் என்று கட்டமைக்க வேண்டும். ஆட்சியாளர்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும் கண்டுக்கொள்ளக்கூடாது-குறை சொல்லக்கூடாது-கொடுக்கும் இலவசத்துக்கு விஸ்வாசமா இருந்தால் போதும்-அதற்குமேல் கேள்விகேட்டால் அவன் சனாதன இந்துவாக கருதப்படுவான்-இந்தியை கற்கவிடக் கூடாது-இந்தி கற்க விருப்பப்பட்டு மக்கள் கேட்டால் மொட்டிலேயே அந்த எண்ணத்தை அழிக்கணும்-இந்திபடிச்சால் அவன் பாராளுமன்றத்துக்குள் நம்மை அசிங்கம் செய்வான்-அதனால் குடும்ப கட்சி குடும்பம் மட்டும்தான் இந்தியை கற்கணும். ஏழைகள் பெயரை சொல்லி ஏழைகளின் கண்ணை குருடாக்கி இதயத்தை கிழித்து ஜடமாக்கி தடயங்கள் இல்லாமல் கொள்ளையடித்து பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதுதான் தான் திராவிடமாடல். இதை தடுப்பவனெல்லாம் சனாதன இந்து என்பதால் ஓட்டை மட்டும் போட்டுட்டு போயிடனும்-கேள்வி கேட்கக்கூடாது. இதற்கெல்லாம் முட்டுக்கொடுக்க கமலஹாசன், மணிரத்னம், சுஹாசினி, அமீர், ரஞ்சித், அட்லீ, சீமான், பிரகாஷ்ராஜ் போன்ற மறைமுக இந்துவிரோதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நிறையபேர் இந்துவாய் இருந்தும் இந்து அடையாளங்களை துறக்க வெட்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாமியனும் கிறிஸ்துவனும் மத அடையாளங்களையோ மதத்தையோ விட்டுக்கொடுப்பதில்லை. அவர்களுக்கு தேசம் கடைசி. சுயநலம் தான் ஜனநாயகம். இதைதான் ஜனநாயகம் என்று இந்த கூட்டம் சொன்னால் அந்த ஜன்நாயகமே தேவையில்லை என்பான் பெரும்பான்மையாயிருந்தும் சொந்தநாட்டில் அகதியாய் வாழும் இந்து. ஜெய் ஹிந்த்.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    இனி தமிழ்நாட்டு பெண்கள் பொங்கி எழுந்தாள் தான் உண்டு ,அவங்களுக்கு டாஸ்மாக் ஊத்தி கொடுப்பதற்கு டிவி சீரியல் தயாரிப்பார்களா கார்பொரேட் குடும்பத்தினர்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement