Load Image
dinamalar telegram
Advertisement

பதிவுத் துறை ஆய்வின் பலே வசூல் பின்னணி!

''கட்சிக்கு உழைச்சவங்களை விட்டுட்டு, மாற்று கட்சியில இருந்து வந்தவருக்கு மாவட்டச் செயலர் பதவியான்னு, தி.மு.க.,வினர் புலம்புதாவ வே...'' என்றபடியே பெஞ்சில்அமர்ந்தார், அண்ணாச்சி.

''எந்த மாவட்ட பஞ்சாயத்துன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தி.மு.க.,வுல புது மாவட்டச் செயலர்களை அறிவிச்சிருக்காங்கல்லா... இதுல, கோவை தெற்கு மாவட்ட செயலராமுருகேசனைபோட்டிருக்காவ வே...''இவர் ஏற்கனவே, தே.மு.தி.க.,வுல மாவட்ட பொறுப்புல இருந்தார்... 2014ல தான், தி.மு.க.,வுல சேர்ந்தாரு... தி.மு.க.,வுல பேரூராட்சி செயலர் பொறுப்புல இருந்தாரு வே...''தே.மு.தி.க.,வுல இருந்து வந்த, 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள் பலரை, 2016 சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., தலைமை ஓரங்கட்டிருச்சு... ஆனா, சத்தமே இல்லாம இருந்த முருகேசனுக்கு, தி.மு.க.,வுல திடீர் முக்கியத்துவம் குடுத்திருக்காவ...''கட்சிக்காக பல காலமா உழைச்சிட்டு இருக்கிற தி.மு.க.,வினர், 'வேற கட்சியில இருந்து வந்தவருக்கு பதவியா'ன்னு கடும் கோபத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''எந்த திட்டத்தையும் நிறைவேற்ற விடாம, முட்டுக்கட்டை போடுறாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மதுரையில செல்லுார் கண்மாய், அதை சுற்றி வாய்க்கால் அமைக்க, 74 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்னு, போன வருஷம், சட்டசபையில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிச்சாரு பா...''இதன்படி, பந்தல்குடி கால்வாய்ல, 2.5 கி.மீ.,க்கும், முடக்காத்தான்ல அரை கி.மீ.,க்கும் சிமென்ட் கால்வாய் அமைக்கணும்... செல்லுார் கண்மாய் ஷட்டரை ஒட்டி, 300 மீட்டர் நீளத்துக்கு மூடிய கால்வாய் அமைக்கிறதுன்னு, எல்லா திட்டமும் பக்காவா பிளான் பண்ணியாச்சு பா...''இப்ப கேட்டா, 'நிதி இல்லாம திட்டத்தை நிறுத்தியாச்சு'ன்னு அதிகாரிகள் சொல்றாங்க... 'மதுரையைச் சேர்ந்தவரா இருந்தும், உள்ளூருக்கு வர்ற திட்டங்களையே, நிதியில்லைன்னு சொல்லி திருப்பி அனுப்ப, ஒரு நிதி அமைச்சர் தேவையா'ன்னு மதுரை மக்கள் புலம்புறாங்க பா...'' என்றார்,அன்வர்பாய்.''வசூல் வேட்டைக்கு புது வழி கண்டுபிடிச்சுட்டா ஓய்...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''பத்திரப்பதிவு துறையில முறைகேடுகளை தடுக்க, திடீர் ஆய்வுகள் நடத்தறது வழக்கம்... இந்த வகையில, சென்னையில திருவல்லிக்கேணி, அண்ணாநகர் சார் - பதிவாளர் அலுவலகங்கள்ல, சமீபத்துல துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செஞ்சார் ஓய்...''அண்ணாநகர் அலுவலக செயல்பாடுகளை பார்த்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதிருப்தி ஆகிட்டா... இதனால, அங்கிருந்த சார் - பதிவாளர் உள்ளிட்ட அஞ்சு பேரை, 'டிரான்ஸ்பர்' செய்ய அமைச்சர் உத்தரவு போட்டார் ஓய்...''இதன்படி, அஞ்சு பேரையும் உடனே மாத்திட்டா... இப்ப, சென்னையில வசூல் அதிகம் இருக்கற அண்ணாநகர் ஆபீஸ் காலியிடங்களுக்கு, 'டிரான்ஸ்பர்' வாங்க கடும் போட்டி நடக்கறது...''இதுக்கு, கோடிகள் வரை பேரம் பேசிண்டு இருக்கா... 'இதை வச்சு பார்க்கறச்சே, ஆய்வுன்னு மக்கள் மத்தியில சீனை போட்டுண்டு, இப்படி ஒரு வசூல் வேட்டை நடத்தறாளோ'ன்னு துறை அதிகாரிகளே பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
****************

அமைச்சரை ஓரங்கட்டும் ஆளுங்கட்சி 'சீனியர்கள்!'''பெண் இன்ஸ்பெக்டரை பத்தி தாறுமாறா பேசிட்டாரு பா...'' என்றபடியே வந்தார், அன்வர்பாய்.

''யாரு, என்னன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தர்மபுரி மாவட்டம், அரூர்ல சமீபத்துல நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்துல பேசிய, 'மாஜி' அமைச்சர் முல்லைவேந்தன், தி.மு.க., ஆட்சியை கடுமையா விமர்சனம் செஞ்சாரு... அதுக்கு உதாரணமா, தன் நிலப்பத்திரம் காணாம போனதை பத்தி பேசினாரு பா...

''இது சம்பந்தமா, மொரப்பூர் போலீஸ்ல புகார் அளிக்க போன அனுபவத்தை சொல்றப்ப, பெண் இன்ஸ்பெக்டர் குறித்து தரக்குறைவா பேச துவங்கிட்டாரு... 'அந்தம்மா, மொரப்பூர் ஸ்டேஷனையே கட்டப்பஞ்சாயத்து ஸ்பாட்டா மாத்தி, தினமும் 1 லட்சம் ரூபாய் வரை வசூல் பண்ணுது'ன்னு குற்றம் சாட்டினாரு பா...

''ஒரு கட்டத்துல ஆவேசமான முல்லை, பெண் இன்ஸ்பெக்டரை ஒருமையில திட்டி தீர்த்துட்டாரு... அவரது பேச்சைக் கேட்டு, அ.தி.மு.க.,வினரே ஆடிப் போயிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''பள்ளிக்கல்வித் துறை மீது, ஆளுங்கட்சி அமைச்சர்களே அதிருப்தியில இருக்காவ வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''அப்படி என்னங்க நடந்துச்சு...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க., ஆட்சியில, பள்ளிக்கல்வித் துறையில பல சீர்திருத்தங்களை செஞ்சாவ... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அதையெல்லாம் ரத்து செஞ்சுட்டு, 'நாங்களும் சீர்திருத்தம் செய்வோம்ல'ன்னு புதுசு, புதுசா அரசாணை வெளியிட்டாவ வே...

''இதுல, பல மாவட்ட கல்வி அலுவலகங்களை பிரிச்சு, அதையெல்லாம், தனியார் பள்ளி இயக்குனரகத்துக்கும்,
தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கும் குடுத்தாவ... பாரம்பரியமா பல வருஷமா செயல்பட்ட டி.இ.ஓ., ஆபீஸ்களை இழுத்து மூடிட்டாவ வே...

''அதுக்கு பதிலா வேற ஊர்ல ஆபீஸ் திறந்து, 'அங்கன போய் வேலையை பாருங்க'ன்னு அதிகாரிகளிடம் சொல்லிட்டாவ... இதுல, பள்ளிக்கல்வித் துறையின் 'மாஜி' அமைச்சர் உட்பட, சில ஆளுங்கட்சி அமைச்சர்களோட சொந்த தொகுதியில உள்ள ஆபீசையும் மூடிட்டாவ... 'என்னய்யா இது... கொஞ்சம், 'டிஸ்கஸ்' பண்ணி முடிவு எடுக்க மாட்டீயளா'ன்னு, அதிகாரிகளிடம் ஆளுங்கட்சி அமைச்சர்களே புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''தனியே தன்னந்தனியே...'' என, திடீரென பாடிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனுக்கும், மதுரை கட்சி நிர்வாகிகளுக்கும் மிகப் பெரிய, 'கேப்' விழுந்துட்டதா பேசிக்கறா ஓய்... அரசு விழாக்கள்ல, இது பட்டவர்த்தனமா தெரியறது ஓய்...

''தென் மாவட்டத்துல, அழகிரி விட்ட இடத்தை எப்படியாவது பிடிச்சிடணும்னு, அமைச்சர் தியாகராஜன் காய் நகர்த்திண்டு இருக்கார்... அவருக்கு முதல்வரின் மருமகன், 'சப்போர்ட்' வேற இருக்காம் ஓய்...

''தியாகராஜன் கலந்துக்கற விழாவுல, அவரோட ஆதரவாளர்களான மேயர் இந்திராணி உட்பட சில பகுதி, வட்ட நிர்வாகிகள் மட்டும் கலந்துக்கறா... நகர, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்னு மூத்த நிர்வாகிகள், அந்த பக்கமே தலைவச்சு படுக்கறது இல்லை ஓய்...

''சீனியர் நிர்வாகிகள்எல்லாம் சேர்ந்து, தியாகராஜனை கட்சி ரீதியா ஓரங்கட்ட எல்லா வேலையும் பார்த்துண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த தேதிமுக கட்சிகாரர் மட்டும் தான் பதவி 'வாங்கினாரா'? அதிமுகவிலிருந்து வந்த கையோடு அமைச்சராகி உள்ளவர் தெரியவில்லையா ? தொண்டனும் உழைத்தவனும் போஸ்டர், பசைவாளி அதிகம்போனால் பிரியாணிப் பொட்டலம் , அதற்குமேல் ஆசைப்படலாமா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement