Load Image
dinamalar telegram
Advertisement

கமிஷனுக்காக காலியிடங்களை நிரப்பாமல் தந்திரம்!

கமிஷனுக்காக காலியிடங்களை நிரப்பாமல் தந்திரம்!''மடிப்பாக்கத்துல, என்னோட சகலை ஆத்துக்கு போயிருந்தேன்... ஊரே நாறிப் போய் கிடக்குறது ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''என்ன பிரச்னைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்துல இருக்கற மடிப்பாக்கம் குபேரன் நகர், மஹாலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர் பகுதிகள்ல, கழிவு நீர் வெளியேற பாதாள சாக்கடை வசதி இல்ல ஓய்...

''முறைப்படி மாநகராட்சி அனுமதி வாங்கி, கழிவு நீர் இணைப்புல விடணும்... ஆனா, கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தி.மு.க., வட்ட நிர்வாகிகள்லாம், 'சிண்டிகேட்' போட்டு, பிளாட்கள், தனி வீடுகளிடம் காச வாங்கிண்டு, முறைகேடா மழை நீர் கால்வாயில இணைப்பு குடுத்துட்டா ஓய்...

''இதனால, கழிவு நீரெல்லாம் மழைநீர் கால்வாயில போறது... சில இடங்கள்ல கழிவுகள் அடைச்சுண்டு, சின்ன மழைக்கே ஊரெல்லாம் தண்ணீர் தேங்கி நாசக்காடா கிடக்குறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இந்த மாசம் சம்பளம் கிடைக்குமான்னு சந்தேகம் வந்துடுச்சுங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாச கடைசியில, ஊதிய பட்டியல் தயாரிப்பாங்க... வருகை பதிவை கணக்கிட்டு, தலைமை ஆசிரியர் இந்த பட்டியலை தயார்
செய்வாருங்க...

''இந்த பட்டியலை கருவூலத்துக்கு அனுப்பி சம்பளம் போடுவாங்க... இப்ப ரெண்டு வருஷமா, 'ஆன்லைன்' வழியா தான் பட்டியலை தயாரிக்கிறாங்க...

''இந்த மாச ஊதிய பட்டியல் தயாரிக்கும் போது, சில பள்ளி ஆசிரியர்களின் விபரங்கள், நிதித் துறையின், 'ஆன்லைன்' தளத்தில் விடுபட்டு இருக்காம்... சில ஆசிரியர்களின் பணியிடங்கள் செல்லாததா காட்டுதுங்க... இப்படி, 3,000 ஆசிரியர்களுக்கு சிக்கல் வந்திருக்குது... இவங்களுக்கு இந்த மாச சம்பளம் கிடைக்குமான்னு சந்தேகமா இருக்குங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''காலியிடங்களை நிரப்ப, 'கட்டை'ய போடுதாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அண்ணாச்சி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''வணிகவரின்னாலே, பணம் புழங்குற துறைன்னு பேச்சு இருக்குல்லா... இந்த துறையில, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகள்ல, 'போஸ்டிங்' வாங்க, எத்தனை கோடின்னாலும் கொட்டிக் குடுக்க தயாரா இருக்காவ வே...

''ஏன்னா, இங்கிருந்து தான் ஏற்றுமதி நிறைய நடக்கு... அதிகாரிகள் வாயை மூடிட்டு இருந்தாலே, பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்...

''சரி, விஷயத்துக்கு வாரேன்... திருப்பூர்ல, இந்த துறையில துணை கமிஷனர் அந்தஸ்திலான மூணு பணியிடத்துல, ரெண்டு காலியா கெடக்கு... அதை நிரப்ப சிலர் தடை போடுதாவ வே...

''துறை அமைச்சரின் உதவியாளர் ஒருத்தர் தான் இந்த வேலையை செய்றததா சொல்லுதாவ... ஒவ்வொரு ஏற்றுமதிக்கு முன்னாடியும், ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் அரசுக்கு கட்டணும் வே...

''ஏற்றுமதி முடிஞ்ச பிறகு, அந்த தொகையை திரும்ப குடுத்துடுவாவ... அதுல, அதிகாரிகளுக்கு, 10 சதவீதம் கமிஷன்ங்கிறது எழுதப்படாத விதி... துணை கமிஷனர் பணியிடங்கள் காலியா இருக்கிறதால, அந்த கமிஷன் தொகை சிலருக்கு போகுது... அதனால தான், அதை நிரப்பாம இழுத்தடிக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.வாசகர் கருத்து (2)

  • Girija - Chennai,இந்தியா

    வீடு வேண்டும் என்று எம் எல் ஏ எம் பி பென்ஸன் வாங்கும், கவர்னரின் தந்தை குமாரி அனந்தன் திமுகவிடம் யாசகம் பெற்றது சரியா? அவருக்கு பின் அந்த வீடு நினைவில்லம் என்று தண்ட செலவு செய்யபோகிறதா? பசித்தால் புலி கூட புல்லை தின்னும் என்பது உண்மை தான்,

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஊரும் நாடும் நாறிநால் என்ன, முழுகினால் என்ன, காசு பிரித்தாயிற்று \கேட்டால், 'மேலிடத்தால் அசைக்க முடியாது அங்கே கொடுத்ததை இங்கே வாங்கினேன்' என்று அலட்சியமாக பதில் வரும். மேலிடமா….. மஹா மவுனம் தான் நடவடிக்கை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement