Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா பேசியது, அவரது சொந்த கருத்து இல்லை. பண்டைய காலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தில் படித்ததை கூறியுள்ளார்; எல்லாம் உண்மை.


டவுட் தனபாலு: பண்டைய காலத்தில் எல்லாரும் நாகரிகமற்றவர்களா, இலை, தழைகளை உடுத்தியபடி காடுகள்ல திரிஞ்சிருக்காங்க... இப்பவும், அப்படி அலையலாம்னு ஆ.ராஜா சொன்னாலும், ஆமாம் சாமி போடுவீங்களா என்ற, 'டவுட்' எழுதே!


பத்திரிகை செய்தி: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், 'அமைச்சர் மகேஷுக்கு உரிய சிகிச்சைகளை, டாக்டர்கள் வழங்கி வருகின்றனர்; அவர் நலமுடன் உள்ளார்' என்றார்.


டவுட் தனபாலு: விசாலமான அரசு பங்களா, குளிர்சாதன அறைகள், சொகுசு கார்ல வலம் வந்த அமைச்சரையே பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளது என்றால், குடிசையிலயும், தெருவோரமும் குடியிருப்பவர்கள் கதி என்னவாகும்...? அமைச்சருக்கு கிடைச்ச சிகிச்சை, அவங்களுக்கும் கிடைக்குமா என்ற, 'டவுட்'டுக்கு சுப்பிரமணியன் பதில் தருவாரா?


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஆ.ராஜா கூறிய அதே ஈ.வெ.ரா., இறுதி பேருரை புத்தகத்தின், 21வது பக்கத்தில், 'நாதி இல்லையே... சொல்கிறதற்கு நாதி இல்லையே... சிந்திக்க நாதி இல்லையே... ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியை தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான், ஓட்டு வாங்குவதற்கு. இதற்கு கவலையே படமாட்டேன் என்கிறானே. யாரது... நம்ம முன்னேற்ற கழகத்துக்காரன் தான்' என்று,


ஈ.வெ.ரா., பேசியதாகவும் உள்ளது. ஹிந்து மதம் பற்றி ஈ.வெ.ரா., பேசியதை கூறும் ஆ.ராஜா, தி.மு.க., பற்றி ஈ.வெ.ரா., பேசியதையும் கூறத் தயாரா?டவுட் தனபாலு: நீங்களும் ஈ.வெ.ரா., புத்தகத்தை படிச்சிருப்பீங்க... அதுல இருந்து, 'கவுன்டர்' குடுப்பீங்க என்பதை, ராஜா கனவுலயும் நினைச்சிருக்க மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!வாசகர் கருத்து (6)

 • Siva - Aruvankadu,இந்தியா

  அழகிரி என்ன செய்தாலும் போண்டா மணிக்கு நிகராக கூட காமெடி பண்ண முடியாது.( போண்டா மணி மன்னிக்கவும். உடல் நிலை பரவாயில்லையா.)

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\பண்டைய காலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தில் படித்ததை கூறியுள்ளார்\\ ...ராசாவே பெரியார் புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டினேன்னு சொல்றாரு .... இவர் எங்க பண்டைய காலத்துக்கு ஓடிட்டார் ? ஒருவேளை அவர் சொன்னதை இவர் கவனிக்கலியோ ??

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  நல்லாயிருக்கே, அமைச்சர் காய்ச்சலும், அடிமட்ட ஏழை காய்ச்சலும் ஒன்றா? ஏழை உயிரெல்லாம் விதி இருந்தால் பிழைக்கட்டும், போனால் என்ன முழுகிவிடும் ?

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  adu sari alakiri நைனா .அப்பா அவனது அல்லது உன்னோடே சொந்த கருத்து இன்னாது ?-அவனோடே சொந்த கருத்து இல்லைண்ணுறதுதான் உன்னோடே சொந்த கருத்தா ?உன் தலைமையில் காங் ? -விளங்கிடும்

 • madhavan rajan - trichy,இந்தியா

  அது போன்ற அரைகுறையாக புத்தகத்தை படிக்கும் ஆட்களெல்லாம் எம் பி ஆகி எதை முழுமையாக படிப்பார்கள்? மத்திய அமைச்சராக இருந்து எப்படி சட்டப்படி நிர்வாகத்தை நடத்தியிருப்பார்கள்? அரைகுறை அறிவு ஆபத்து என்பதை அரியமாட்டார்களா? மூக்குடைபட்டு நிற்கிறார். அசிங்கம் இல்லையா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement