Load Image
Advertisement

எதிர்த்து நிற்காம அவரு வாங்கிட்டாராம் 'பெட்டி' பதவிய பிடிச்சாராம் இவரு பல கோடிகள கொட்டி

வெயில் சற்று தணிந்த ஒரு மாலை நேரத்தில், சித்ராவும், மித்ராவும் மாநகராட்சி பூங்காவுக்கு சென்று, பரந்து விரிந்திருந்த ஆல மரத்தின் கீழ் இருவரும் அமர்ந்தனர்.

''ஒற்றர்படை 'டிரான்ஸ்பர்' விவகாரம் தொடர்பா அதிகாரி 'ஆக்ஷன்' எடுத்திருக்காரு மித்து,'' என ஆரம்பித்தாள் சித்ரா.''எப்டிக்கா சொல்றீங்க?''''சிட்டிக்குள்ள இருக்கற ஒற்றர்படைல நிறைய பேரை அப்பாயின்ட் பண்ணியிருக்காங்க. கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு போலீஸ்காரர் கூட அதில் இருக்காருன்னு போன வாரம் பேசினோம்ல. இதை கவனிச்ச அதிகாரி, அவரையும், கரைபடிஞ்ச கரங்களுக்கு சொந்தக்காரங்க சிலரையும் கூட வேற பிரிவுக்கு மாத்திட்டாராம்,'' என்றாள் சித்ரா.''வெரிகுட்'' என்ற மித்ராவுக்கு கை கொடுத்த சித்ரா, 'தெற்கு பார்த்த ஸ்டேஷன்ல எழுத்தரா இருந்த 'செல்வமான' ஒருத்தரை, வடக்கில் மாத்தினாங்க. அங்கேயும் அதே போஸ்டிங் தான். கல்லா கட்டுறதுல்ல கில்லாடியாம்,''''எப்படியும் இந்த ஸ்டேஷனில் வேல பார்த்து,'5சி' தேத்திடணும்'னு சொல்லிட்டிருந்தாராம். அதுக்குள்ள அவரு மேல சில போலீஸ் காரங்களே பெட்டிஷன் போட்டதால, அவரை, 'சிசிபி'க்கு மாத்திட்டாங்களாம். இருந்தாலும், இன்னும் ரிலீவ் ஆகலையாம்...'' என்று சொல்லி தண்ணீர் குடித்தாள்.

சாட்டை சுழலுமா?''ஆசைப்படலாம் தப்பில்ல... பேராசைப்பட்டா இப்படித்தான் நடக்கும்,'' சொன்ன மித்ரா, ''பக்கத்துல இருக்க கோவை கலெக்டருக்கு, நம்ம மாவட்ட மக்கள் பாராட்டு மழை பொழியறாங்களாம்'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''அப்படி என்ன செய்துட்டார்?'' சித்ரா கேட்டாள்.''அந்த மாவட்டத்துக்குள்ள இருக்கற ஊராட்சிகள்ல பல வருஷமா 'டேரா' போட்டு, குறுநில மன்னர் கணக்கா 'செட்டிலாகி' இருந்த ஊராட்சி செயலாளர்களை கூண்டோடு 'டிரான்ஸ்பர்' பண்ணியிருக்கார்.''நம்ம மாவட்டத்துல கூட 20, 25 வருஷமா, ஒரே ஊராட்சியில, வேல பார்க்குற நிறைய செகரட்ரிங்க இருக்காங்க. பல இடங்கள்ல, அவங்கதான் ஊராட்சியோட நிழல் தலைவர் மாதிரி செயல்படறாங்க. வரி விதிப்பு, கட்டட அனுமதின்னு நிறைய விஷயங்கள்ல, நிறைய பணம் சம்பாதிச்சு நிலம், தோட்டம், வீடுன்னு ஏகபோகமா 'செட்டில்' ஆயிட்டாங்க. அதனால, இங்கேயும் கலெக்டர் சாட்டைய சுழற்றுவாருன்னு எதிர்பார்க்கிறாங்க,'' விளக்கினாள் மித்ரா.

'மாமூல்' வாழ்க்கை!''பட்டா மாறுதலுக்கு கூட இவ்வளவு செலவாகாது. ஆனா, பழைய ரெக்கார்டு எடுத்து தர இவ்ளோ கட்டணமான்னு, மக்கள் புலம்பறாங்க...'' என சித்ரா சொல்லியதும், ''இது எங்கீங்க்கா...?'' கேட்டாள் மித்ரா.''பல்லடத்தில தான். அந்த தாலுகா ஆபீசில் வேல பார்க்குற ஒரு ஆபீசர், 'தட்சணை' வாங்காம, பழைய ரெக்கார்டுகளை தர்றதே இல்லையாம். 'முருகா' நீயே எல்லாத்தையும் பார்த்துக்கப்பான்னு புலம்பற அளவுக்கு 'வாங்கி' தள்றாராம்,'' சித்ரா விளக்கினாள்.''அதே ஊர்ல குவாரி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துச்சுல்ல; அதுக்கு அதிகாரிங்கதான் முக்கிய காரணம்னு பேசிக்கிறாங்க. தங்களோட வேலைய சரியா செய்யாம, 'மாமூல்' வாழ்க்கை நடத்தியதால தான் விதிமீறல் அதிகமாயிடுச்சு. ஆதாரத்தோட விவசாயிங்க சுட்டிக்காட்டியிருக்காங்க. இத கேள்விபட்ட கலெக்டரு, அப்படியே 'ஷாக்' ஆகிட்டாராம்.'' என பல்லடம் மேட்டரில் தனக்கு தெரிந்ததை சொன்னாள் மித்ரா.''மித்து... என்ன சொன்னாலும், 'பெரியசாமி' பாத்துப்பாருன்னு சொல்வாங்க. ஆனா, அங்க நிலைமை தலைகீழால்ல இருக்கு,'' சொன்ன சித்ரா, ''மாடு பிடிக்க தெரியாதவங்க எல்லாம், கால்நடைத்துறைல உதவியாளரா சேர்ந்துட்டாங்களாம்,'' கால்நடை துறை பற்றி பேசினாள்.''அந்த துறையில், லஞ்சமே இல்லா 'போஸ்டிங்' போட்டதா பேசினாங்களே...'' கேள்வி கேட்டாள் மித்ரா.''நீ சொல்றது 'கரெக்ட்' தான் மித்து. உடுமலை வட்டாரத்துல, 'போஸ்டிங்' போடப்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்ல, 16 பேர் இணை அதிகாரியா இருக்கற ஒருத்தரோட சொந்தக்காரங்கன்னு பேசிக்கிறாங்க…'' என, காதில் கேட்டதை சொன்னாள் மித்ரா.

எங்கெங்கும் 'அரசியல்'''எப்டியோ... தறிக்காரங்க நடத்திட்டு இருந்த 'ஸ்டிரைக்' வாபஸ் ஆகிடுச்சு'' என பேச்சை மாற்றினாள் சித்ரா.''யாருங்க்கா அக்கா அப்படி சொன்னது. அவிநாசிக்கிட்ட இருக்கற தெக்கலுார், சோமனுார் சங்கத்துக்காரங்க மட்டும் தான் 'ஸ்டிரைக்' வாபஸ் அறிவிப்பை வெளியிட்டாங்க. மத்த பக்கம், அதுக்கப்புறம் தான், படிப்படியா வாபஸ் வாங்கினாங்களாம். இப்ப இந்த விவகாரம் அரசியலாகிடுச்சாம்,''''ஸ்டேட் முழுக்க லட்சக்கணக்குல விசைத்தறிங்க இருக்கப்போ, திருப்பூர், கோயமுத்துார்ல மட்டும் ஸ்டிரைக் பண்றதுக்கு, அ.தி.மு.க.,வோட துாண்டுதல் தான் காரணம்ன்னும் ஒரு பேச்சு ஓடுது. தி.மு.க., ஆதரவு சங்கத்துக்காரங்கள வைச்சு, ஸ்டிரைக்கை உடைச்சிட்டாங்கன்னும் ஒரு பேச்சும் வருது...''

பணம் பாதாளம் வரை...''இருந்தாலும் இருக்கும்...'' என்ற சித்ரா, ''பதவியை தக்க வைக்க என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க போல,'' என்றாள்.''யாருங்க்கா... என்ன விஷயம்''''மித்து, ஆளுங்கட்சியில, வடக்கு பகுதி பொறுப்புல இருந்தவருக்கு, தெற்கு கொடுத்துட்டாங்களாம். இதனால, கட்சிக்குள் மத்த நிர்வாகிகள் மத்தியில புகைச்சலாம். இதுக்காக, சில கோடி ரூபாய், கட்சி நிதிங்கற பேர்ல கட்சி கஜானாவுக்கு போயிருக்காம். அவருக்கு போட்டியா இருந்தவரும், 'லம்பா' வாங்கிட்டு ஒதுங்கிட்டார்ன்னு உடன்பிறப்புகளே சொல்றாங்கப்பா...''''ஓ ேஹா...'' என்றாள் மித்ரா.''இதையும் கேளு மித்து. கார்ப்ரேஷன் பொறுப்பில இருக்கறவரும், மாவட்ட செயலாளரு பதவிக்கு 'டிரை' பண்ணியிருக்காரு. அவருக்கு பதவி கிடைக்கும்ங்ற நம்பிக்கைல, தெற்கு தொகுதி வி.ஐ.பி.,யோட ஆதரவாளரா இருந்த நிறைய பேரு, இவரோட ஆதரவாளரா மாறிட்டாங்க...''''அவங்களை அழைச்சிட்டு, சென்னைக்கும் போயிருக்காரு. ஆனா, காரியம் கை கூடாததால, பின்வாங்கிட்டாராம். அவரை நம்பி போன கட்சிக்காரங்க, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா புலம்பறாங்களாம்...'' என்றாள் சித்ரா.''பணம் பாதாளம் வரை பாயும்னு' சும்மாவா சொல்லியிருக்காங்க என்ற மித்ரா, \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\இரண்டு பாக்கெட் சுண்டலை வாங்கி, சித்ராவிடம் ஒன்றை கொடுத்தாள்.சுண்டலை சாப்பிட்டவாறே, ''நானும் ஒரு ஆளுங்கட்சி மேட்டர் சொல்றேன்'' என்ற சித்ரா, ''ஹிந்துக்களை இழிவா பேசிட்டார்ன்னு சொல்லி, சம்பந்தப்பட்ட எம்.பி.,யை கண்டிச்சு கடையடைப்பு நடத்தினாங்கள்ல. அவிநாசியில இருக்கற ஆளுங்கட்சி நிர்வாகிகள், கடையடைப்பை பிசுபிசுத்து போக வைக்கணும்ன்னு 'பிளான்' பண்ணி, கடை கடையா போய் கடைய அடைக்காதீங்கன்னு பிரசுரம் கொடுத்திருக்காங்க,''''ஆனா, யாரும் கேட்கலையாம். கிட்டத்தட்ட, 95 சதவீத கடைகள் பூட்டிட்டாங்க. இதுல என்ன காமெடின்னா, ரெண்டு, மூனு கோஷ்டியா பிரிஞ்சு கிடக்கிற தி.மு.க.,காரங்க, தனித்தனி கோஷ்டியா போயிருக்காங்க,'' என்றாள் சித்ரா.''முதல்ல நீங்கெல்லாம் ஒத்துமையா ஒன்னு சேர்ந்து வாங்க. அப்புறமா எங்கள ஒன்னு சேர்க்கலாம்ன்னு, சொல்லாத குறையா, வியாபாரிங்க நடந்துகிட்டாங்களாம். முக்கிய நிர்வாகிகள், கட்சியை வளர்க்க ஆர்வம் காட்றாங்களோ இல்லையோ; அவங்க அவங்களை வளர்த்துக்க தான் ஆர்வம் காட்டிக்கிறாங்கன்னு, ஒரே பேச்சு பலமா வலம் வருது...''

இல்லாத இடமில்லை''கட்சிக்காரங்க ஜாதி பார்ப்பாங்கன்னா, லிங்கேஸ்வரர் ஊர்ல வக்கீல் சங்கத்திலயும் ஜாதி அரசியல் பண்றாங்களாம். வெளி மாநிலத்திலிருந்து செட்டிலான ஒரு வக்கீலை, சங்கத்துல முக்கிய பொறுப்புல இருக்கற ஒருத்தரு கூப்பிட்டு, திட்டிட்டாராம்,''''அந்த நிர்வாகியால, தன்னோட உயிருக்கே உத்தரவாதம் இல்லைன்னும், தன்னோட தரப்பு நியாயத்தை பொதுக்குழு கூடறப்போ மனுவா தர்றேன்னும், இன்னொரு நிர்வாகிக்கு புகாரா லெட்டர் எழுதியிருக்காரு, அந்த வக்கீல்,'' என்றாள் மித்ரா.''ம்ம்ம்... எல்லாத்தையும், அந்த ஈஸ்வரன் பாத்துட்டுத்தான் இருக்கார்,'' என்ற சித்ரா, ''விளையாட்டுல கூட, அரசியல் பண்ணாங்கன்னா, என்னதான் பண்றது'' என, அங்கலாய்த்தாள்.''எப்படி சொல்றீங்க்கா...''''மாவட்டம் முழுக்க குறுமைய விளையாட்டுப் போட்டியை நடத்தி முடிச்சாங்கள்ல. இதுல, ஒருத்தரு அதிகபட்சம், மூனு போட்டியில தான் பங்கெடுக்க முடியுமாம்; ஆனா, ஒரு கவர்ன்மென்ட் ஸ்கூல் பி.டி., வாத்தியார், தன்னோட மகளை, நாலு போட்டியில பங்கெடுக்க வச்சிருக்காரு. அவங்க ஜெயிச்சு பரிசும் வாங்கியிருக்காங்க. இதனை சம்மந்தப்பட்ட ஆபீசர் கண்டுக்கவே இல்லையாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா.. நாளைக்கு கருப்பகவுண்டம்பாளையம் போகோணும். அங்கிருக்கிற முருகன் சித்தப்பா கிட்ட ஒரு வேலைன்னு அப்பா சொல்லீட்டு இருந்தாரு...'' என்ற மித்ரா, ''அக்கா... மழை வர்ற மாதிரி இருக்குது. கெளம்பலாமா?'' என்றதும், ''ஓ.கே.,'' சொன்னாள் சித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement