1914 ம் ஆண்டு
முதல் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த நேரம்
பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும் , ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும் இந்த போரில் ஈடுபட்டிருந்தன
அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து நாட்டினர்தாம் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்இந்தியாவில் சுதந்திர கனல் மூண்டு கொண்டு இருந்த நேரமும் அதுதான்.
இந்தியாவிற்குள் இருந்தபடி அறவழியில் இங்கிலாந்து நாட்டினரை எதிர்த்து பலர் போராடினர் சிலர் இந்தியாவிற்கு ஆதரவாக வெளியில் இருந்து ஆதரவு திரட்டியபடி ஆயுதவழியில் போராடினர்அவர்களில் நேதாஜியும்,செண்பகராமனும் முக்கியமானவர்கள்.
இதில் நேதாஜியைப் பற்றி பலருக்கும் தெரியும் செண்பகராமனைப் பற்றி நிறைய பேருக்கு தெரியாது.நேதாஜியின் வீர முழக்கமான ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நேதாஜிக்கு வார்த்துக் கொடுத்தவரேசெண்பராமன்தான் இதனாலலே அவர் பின்னாளில் ‛ஜெய்ஹிந்த்' செண்பகராமன் என்றழைக்கப்பட்டார்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்து வளர்ந்த தமிழராான செண்பகராமன், பள்ளியில் படிக்கும் போதே சுதந்திரதாகம் உடையவராய் வளர்ந்தார். இதன் காரணமாக போலீசாரால் தேடப்பட்டபோதுஜெர்மன் சென்று அங்கு பொறியியல் முடித்து பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவராய் விளங்கினார், குறிப்பாக யுத்தக்கப்பலை இயக்குவதிலும் செலுத்துவதிலும் சிறப்பு பயிற்சி பெற்றிருந்தார்.
உலகப்போரில் ஜெர்மன் தன் எதிரியான இங்கிலாந்திற்கு எதிராக வரிந்துகட்டிய போது எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இங்கிலாந்து ராணுவத்தினரை அழிக்க ஜெர்மனி ராணுவத்துடன் செண்பகராமன் கைகோர்த்தார்.
1914 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ந்தேதி இரவு நேரம் கடல் பகுதிக்குள் ஊடூருவிய ஒரு கப்பல் சென்னையை குறிபார்த்து 130 குண்டுகளை மழையாக பொழிந்தது,பிரிட்டிஷாருக்கு சொந்தமான பெட்ரோல் சேமிப்பு கிடங்கு பற்றி எரிந்தது,கோட்டைச்சுவர் இடிந்து விழுந்தது,பிரிட்டிஷ் போலீசார் சிலர் இறந்தனர் பலர் காயம் பட்டனர்.
என்ன ஏது என்று பிரட்டிஷ் அரசு சுதாரிப்பதற்குள் குண்டுவீசிய கப்பல் ஆழ்கடலுக்குள் சென்று மறைந்தது
அந்த கப்பலின் பெயர்தான் எம்டன் கப்பலாகும்.
எப்படிவரும் எங்கேயிருந்து தாக்கும் அடுத்து என்ன செய்யும் என்பதையே யாராலும் கணிக்கமுடியாத அளவிற்கு கடல் ராஜாவாக செயல்பட்ட எம்டன் யுத்தக் கப்பலின் மூளையாக இருந்தவர்தான் செண்பகராமன்.இந்த எம்டன் கப்பலைஅழிப்பதற்காகவே பிரிட்டிஷார் 72 போர்க்கப்பல்களை ஏவிவிட்டனர் என்றால் எம்டனின் மகத்துவம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நம்மை யாராலும் நெருங்க முடியாது என்ற இறுமாப்புடன் சென்னையில் முகாமிட்டிருந்த பிரிட்டீஷ் ராணுவத்தை கதிகலங்கை வைத்த எம்டன் கப்பல் குண்டு வீசிய நாள் நாளை மறுதினமாகும் (செப்டம்பர் 22) .இந்த குண்டு வீச்சு நடந்து108 ஆண்டுகளாகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாக காம்பவுண்டு சுவரில் குண்டு விழுந்த இடத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது இந்த கல்வெட்டை நாளைமறுதினம் மாலை 4 மணியளவில் மலர்மாலையால் அலங்கரித்து செண்பகராமன் படத்தைவைத்துதேசபக்தர்கள் மரியாதை செலுத்துவர் நீங்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தலாம்.
இந்த நிகழ்வில் செண்பகராமின் வாரிசுகளில் ஒருவரான ஒய்வுபெற்ற பாங்க் அதிகாரியான சேதுசேஷன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்,அவரது எண்:98400 21231.-எல்.முருகராஜ்
,,,,,