Load Image
Advertisement

நிஷாந்த் வாழ்கிறான்

டில்லியைச் சார்ந்த காண்ட்ராக்டர் உபேந்தருக்கு ஆறு குழந்தைகள் இதில் முதல் ஐந்தும் பெண் குழந்தைகள் ஆறாவதாக பிறந்தவன்தான் நிஷாந்த்.
கொழு கொழுவென குண்டுக்கன்னங்களுடன் பிறந்த நிஷாந்தை அந்தக் குடும்பத்தின் செல்லக்குழந்தை, மூத்த சகோதரிகள் ஐந்து பேரும் நிஷாந்ததை அம்மாவைப் போல துாக்கிவைத்து கொஞ்சுவர்.

அவன் கட்டிலிலும், தொட்டிலிலும் இருந்தை விட குடும்பத்தினரின் மடியிலும் தோள்களிலும் இருந்த நேரமே அதிகம். அந்த அளவிற்கு அவனை ஆள் மாற்றி ஆள், கிழே இறக்கிவிடாமல் கொஞ்சிக் கொண்டே இருப்பர்.முதல் வருட பிறந்த நாள் குதுாகலமாக கொண்டாடப்பட்டது.கிருஷ்ணர் போல ராமர் போல விதவிதமாக வேடம் போட்டு குழந்தையை படமெடுத்து மகிழ்ந்தனர்.
குழந்தைக்கு பதினாறு மாதம் ஆன போது அந்த பிஞ்சு நிஷாந்ததிற்கு கால்கள் முளைத்துவிட குடுகுடுவென ஒடிக்கொண்டே இருந்தான்.
கடந்த 17 ந்தேதி அப்படி ஒடிய போது தடுமாறி கிழே விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற்பட்டது.உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு துாக்கிக் கொண்டு ஒடினர்.ஆனால் நிலமை சீரியசாக இருக்கவே டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.
அங்கு டாக்டர்கள் குழு குழந்தையை பிழைக்கவைக்க எட்டு நாட்கள் இரவு பகலாக போராடினர் ஆனால் அவர்களது போராட்டம் தோல்வியில் முடிந்தது, குழந்தை மூளைச் சாவு அடைந்துவிட்டது இனி பிழைக்கவே முடியாது என்பதை கனத்த இதயத்துடன் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
‛என் மகனை துாக்கி கொஞ்சாமல் ஒரு நாள் கூட நான் வீட்டைவிட்டு வெளியே போனது கிடையாது, அன்று ஒரே ஒருநாள்தான் அவனை துாக்கிக் கொஞ்சாமல் வீட்டைவிட்டு அவசர வேலை காரணமாக வெளியே போனேன், போன சிறிது நேரத்தில் அவன் கிழே விழுந்துவிட்டான் என்று தகவல் வந்தது.. அலறியடித்து ஒடிவந்து மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லாமல் போய்விட்டது, இனி என் மகனை துாக்கவே முடியாது போய்விட்டது' என்று தந்தை கதறி கதறி அழுதார்.
அவரது துக்கத்திற்கு ஆறுதல் கூறிய மருத்துவர்கள் குழு கூடவே ஒரு தகவலையும் சொன்னார்கள் நிஷாந்த்தின் உறுப்புகளை தானம் செய்தால் இதே மருத்துவமனையில் ஈரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருக்கும் இரு குழுந்தைகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும் நிஷாந்தின் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதிக்கிறீர்களா? என்று கேட்டனர்.
என் மகன் எதற்காக பிறந்தான் என்று இப்போது புரிந்து விட்டது, மற்ற குழந்தைகளை வாழவைக்கவே பிறந்து இருக்கிறான் என்று கூறிய நிஷாந்தின் தந்தை உறுப்புதானத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இரவு 2 மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை அதிகாலை 5 மணிக்கு முடிந்தது.சிறு நீரகமும்,ஈரலும் மற்ற இரு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டது நிஷாந்தின் கரு விழிகளும் மற்றும் சில உறுப்புகளும் எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பு வங்கியில் பத்திரப்படுத்தப்பட்டது.
உறுப்புகளை வெற்றிகரமாக பொருத்திய பிறகு மருத்துவர்கள் கூறுகையில் எங்கள் மருத்துவமனையின் பதிவுகளின்படி சிறுவயதில் தனது உறுப்புகளை தானம் செய்த முதல் குழந்தை நிஷாந்த்தான் என்றனர்.
நிஜத்தில் நிஷாந்த் இறக்கவில்லை மற்ற குழந்தைகளின் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் வாழவும் இருக்கிறான்.
--எல்.முருகராஜ்.வாசகர் கருத்து (2)

  • S.Ganesan - Hosur,இந்தியா

    மனதை மிகவும் நெகிழ வைத்துவிட்டது

  • KAS - Lagos,நைஜீரியா

    Baby Nishanth is an angel and is immortal now.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement