Load Image
Advertisement

லண்டனில் கவுன்சிலரான சென்னை தமிழர்...

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் லண்டனின் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு துணையாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது தினமலர் இணையதளம்தான்என்று சென்னை வந்துள்ள லண்டன் கவுன்சிலர் அப்பு சீனிவாசன் குறிப்பிட்டார்.
உண்மையும்,உழைப்பும்.உறுதியான மனமும் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய முடியும் என்பதற்கான உதாரணம்தான் அப்பு சீனிவாசன்லண்டனில் உள்ள பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் ‛குராய்டன்' பகுதயின் கவுன்சிலராக அங்குள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அப்பு சீனிவாசன்சென்னை கேகேநகரில் பிறந்து வளர்ந்தவர்.

கடந்த 1990-ம் ஆண்டு பொறியியல் துறயைில் மேல்படிப்பிற்காக லண்டன் பயணம் மேற்கொண்டவர் அங்கு படித்துக் கொண்டே வேலை பார்த்தார்,படித்து முடிப்பதற்குள்ளாக பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.தனது அறிவால் ஆ்ற்றலால் படிப்படியாக வளர்ந்து அந்த நிறுனத்தின் முதன்மை அதிகாரியானார் இவரால் நிறுவனம் வளர்ந்தது, நிறுவனத்தால் இவரும் வளர்ந்தார்.இவரது திறமையைப் பாராட்டி இவருக்காகவே புதிய நிறுவனத்தை துவக்கி அதற்கு இவரை தலைமை நிர்வாகியாக்கினர்.
ஒரு கட்டத்தில் அடுத்தவர்களுக்கு உழைத்தது போதும் என்று கையில் இருந்த பணத்தைக் கொண்டு தனது தாயார் சரோஜினியின் நினைவாக அங்குள்ளவர்களின்உச்சரிக்க ஏதுவாக ‛சாரா' என்ற பெயரில் சூப்பர் மார்கெட்டை துவக்கினார்.
இப்படி படிப்படியாக முன்னேறி லண்டனில் ஒரு முக்கியமான நபராக மாறினாலும் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து சொந்தமாக தொழில் துவங்குவது வரைஅவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் பிரச்னைகளும் மிக அதிகம்.
தனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் புதிதாக லண்டனுக்கு பிழைக்கவரும் எந்த தமிழனுக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்து ‛குராய்டன்' தமிழ் சங்கத்தை ஏற்படுத்திஅந்த சங்கத்தின் மூலம் லண்டன் வரும் தமிழர்களுக்கும், வந்த தமிழர்களுக்கும் பெரும் உதவி செய்துவருகிறார்.
இவரது இந்த உதவும் மனப்பான்மை காரணமாக லண்டன் வாழ் தமிழர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார், அப்பண்ணன் சொன்னால் போதும் என்றளவில்மரியாதையைப் பெற்றுள்ளார்.
இப்படி தமிழர்கள் மத்தியில் இடம் பிடித்தது போல லண்டன் மக்களிடம் செல்வக்கு பெற்றுள்ளார் அதற்கு காரணமாக இருந்தது கோவிட்தான்.
லண்டனைப் பொறுத்தவரை தனிமையைப் பெரிதும் விரும்புபவர்கள், பதினெட்டு வயதானானல் ஆனோ பெண்ணோ தனியாக அவர்கள் வாழ்க்கையை அவர்கள்பார்த்துக் கொள்ள வேண்டும் அதே போல எவ்வளவு வயதான தாய் தந்தையாக இருந்தாலும் போனிலோ நேரிலோ பார்த்தால் ஒரு ஹலோ சொல்வதோடு முடித்துக் கொள்வர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வயதாகி தனியாக வாழும் வயது முதிர்ந்தவர்கள் கோவிட் காலத்தில் உணவிற்கும் மருந்துக்கும் மருத்துவ உதவிக்கும் தவித்துப் போனார்கள்,மருந்தும், உணவுப் பொருளும் அதிக விலைக்கு விற்கப்பட்டது அந்த நேரத்தில் வயதானவர்கள் அத்தனை பேருக்கும் மகனாக இருந்தவர் அப்பு சீனிவாசன்தான்.
அவர்களின் உணவு மற்றும் மருந்து தேவை தடையின்றி குறைந்த விலையில் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் கோவிட் பயமின்றி அவர்களை நேரில் சந்தித்துதைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்தார் , தடுப்பூசி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதன் காரணமாக கோவிட் நேரத்தில் மக்களுக்காக சிறந்த முறையில் தொண்டு செய்தவர் என்ற மகத்தான விருது வழங்கப்பட்டது விருது வழங்கும் விழாவில்இனம் பேதம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் உழைக்கும் இவரைப் போன்றவர்கள்தான் அரசியலில் ஆட்சியில் இடம் பெறவேண்டும் என்று தொழிலாளர்கட்சியின் முக்கிய தலைவரும் அடுத்த பிரதமராக வருவார் என்று கணிக்கப்படுபவருமான கீர் ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
அதற்கேற்ப அடுத்து வந்த அந்தப்பகுதிக்கான கவுன்சிலர தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
குராய்டன் பகுதியின் கவுன்சிலர் என்ற கவுரப்பட்டத்தை தனது தாயின்காலில் சமர்ப்பித்து ஆசிபெற மனைவி கார்த்திகா, மகன் குருகிருஷ்ணாஆகியோருடன் சென்னை வந்துள்ள அவர் நமது நிருபரிடம் பேசுகயைில்..
தமிழர்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்களில் லண்டனும் ஒன்று இங்குள்ள தமிழர்கள் எந்த தேவைக்காக துாதரகத்தை அணுகினாலும், நீங்கள் அப்பண்ணனை போய்பாருங்கள் என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றுள்ளேன்.
சக தமிழர்கள் ஆதரவுடன் பல கோடி ரூபாய்க்கு தமிழ்சங்கம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, இங்கு பிறந்து வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது,நமது தமிழ்ப்பற்றும் தாய்மண் பற்றும் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து மூத்த தமிழறிஞர்கள் தமிழ் கலைஞர்கள் பலரை அழைத்து விழாநடத்திவருகிறோம்.வருங்காலத்தில் தமிழர்களுக்காக இன்னும் நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம்
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழர்களாகிய நாங்கள் பெருமைப்படக்கூடிய விஷயம் தினமலர் இணையதளம்தான்தமிழ்நாட்டில்என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள எங்கள் எல்லோர் மொபைலிலும் உள்ள ஆப் தினமலர் ஆப்தான், தினமலர் இணையதளம் மேலும்வாழ்க வளர்க என்று கூறி முடித்தார்.
-எல்.முருகராஜ்.



வாசகர் கருத்து (9)

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    ... இதுவே ஒரு ஆங்கிலேயர் இந்தியாவில் வந்து தேர்தலில் போட்டியிட முடியுமா ..?

  • Mohan - COIMBATORE,இந்தியா

    இதுல என்ன பெருமை வேண்டி கெடக்குது ...என்ன லண்டன் மியூசியத்துல இருக்குற கோஹினூர் வைர கிரீடத்தை கொண்டு வந்திடப்போறாரா ..இப்படித்தான் ஆஹா ஓஹோ அப்டின்னாங்க இந்தியவளி கமலா ஹாரிஸ் அப்டினு இந்தியாவை அஞ்சு காசுக்கு கூட மதிக்கல

  • ranjan - france,பிரான்ஸ்

    ஏற்கனவே இலங்கையர்கள் யாழ் தமிழர்கள் இப் பதவியில் பலர் இருக்கிறார்கள் லண்டன் பரவலாக

  • DVRR - Kolkata,இந்தியா

    அப்போ நான் கேள்விப்பட்டது தவறா???இங்கிலாந்தில் எல்லா கவுன்சிலரும் முஸ்லிமாம்???ஆகவே இவர் ஒருத்தர் தான் தான் வேறா???

  • karupanasamy - chennai,இந்தியா

    ,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement