Load Image
dinamalar telegram
Advertisement

'அதை எப்படி எடுத்துக்கறது!'

'அதை எப்படி எடுத்துக்கறது!'



கோவை ம.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
நிருபர் ஒருவர், நடிகர் ரஜினி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்தது குறித்து கேட்ட போது, 'ரஜினி சொல்வது அவருக்கும் புரியாது; யாருக்கும் புரியாது. ஒரு நாள் அரசியலுக்கு வருவேன் என்பார். மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லிட்டேன் என்பார். பின், அரசியலுக்கு வரவில்லை என்று மாறி மாறி பேசுவார். அவரை எல்லாம் சீரியசாக எடுத்துக்க வேண்டாம்' என்றார்.

உடன் மூத்த நிருபர் ஒருவர், 'மாறி மாறி பேசுறவங்க பேச்சை, சீரியசாக எடுத்துக்க வேணாம்னா, அதுல இவரு தானே முதல் ஆளா இருப்பாரு... தி.மு.க.,வை இவரு திட்டாத திட்டுமில்ல... புகழாத புகழ்ச்சியும் இல்ல... அதை எப்படி எடுத்துக்கறது...' என
முணுமுணுக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement