Load Image
dinamalar telegram
Advertisement

ஒரே நேரத்தில் ஒரு கோடி மாணவர்கள்தேசபக்தி பாடல்களை பாடி சாதனை

ஜெய்ப்பூர்,:ராஜஸ்தானில் ஒரு கோடி மாணவ - மாணவியர் ஒரே நேரத்தில் தேசபக்தி பாடல்களை பாடி உலக சாதனை படைத்தனர்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, தேசபக்தி பாடல்களைப் பாடி உலக சாதனை படைக்க மாநில அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, மாநிலமெங்கும் ஒரு கோடி பள்ளி மாணவர்கள், வந்தே மாதரம், சாரே ஜஹான் சே அச்சா உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை தொடர்ந்து 25 நிமிடங்களுக்கு பாடி உலக சாதனை படைத்தனர்.

இது பற்றி முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ''இந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துகள். ''லண்டனில் உள்ள மதிப்புமிக்க நிறுவனமான, 'வேர்ல்ட புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' ஒரு கோடி மாணவர்கள் பாடிய பாடல்களை கேட்டு, மாநில அரசுக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

பிரமாண்டமான இந்திய தேசிய கொடி

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ,'டைம்ஸ்' சதுக்கத்தில் பிரமாண்ட மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. எப்.ஐ.ஏ., எனப்படும் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு, கதரால் தயாரிக்கப்பட்ட 220 அடி நீளமுள்ள தேசியக் கொடியை டைம்ஸ் சதுக்கத்தில் பறக்க விட்டுள்ளது. 'ஆக., 15ல், 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம், 'ஹட்ஸன்' ஆற்றுப் பகுதி ஆகிய இடங்களிலும் தேசியக் கொடியை பறக்க விடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்' என அந்த அமைப்பு தெரிவித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement