Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. கடந்த ஆட்சியில், போதைப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டாலும், சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைத்தது. அதை ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.


டவுட் தனபாலு: நீங்க ஆட்சிக்கு வந்து, 15 மாதங்கள் ஆகிடுச்சு... அரசு இயந்திரம், போலீஸ் துறை எல்லாம் உங்க முதல்வரின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு இயங்கும் போது, இன்னும் பழைய ஆட்சி மேல பழி போட்டுட்டு இருப்பது நியாயமா என்ற, 'டவுட்' ஏற்படுதே!



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
கவர்னர் ரவியுடன் நடிகர் ரஜினி பேசியது நாட்டு அரசியல். தி.மு.க.,வின், 'பி டீம்' ஆக இருப்பவர்களும், தி.மு.க., கொடுக்கக் கூடிய ஆக்சிஜனில் உயிர் வாழக்கூடிய தலைவர்களும், தங்களின் இருப்பிடத்தை காட்ட ரஜினியை விமர்சிக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வேலையில்லை. தி.மு.க., தரும் ஆக்சிஜன் சிலிண்டரை கையில் சுமந்து, உயிர் வாழ்ந்து வருகின்றனர்.


டவுட் தனபாலு: ரஜினி அரசியலுக்கு வராமல் ஆட்டத்தில் இருந்து விலகியதால் தான், தி.மு.க.,வால் ஆட்சிக்கு வர முடிஞ்சது என்பதில் யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது... மறுபடியும் அவர் அரசியல்னு ஆரம்பிக்கிறதால, தி.மு.க., கூட்டணியினர், 'ஜெர்க்' ஆவது சகஜம் தானே!


பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., ஜெயச்சந்திரன்: 'ஆருத்ரா கோல்டு டிரேடிங், எல்.என்.எஸ்., மற்றும் எல்பின்' ஆகிய மூன்று மோசடி நிறுவனங்களும், 2 லட்சம் பேரிடம், 8,624 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளன. இந்நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்து, 212 கோடி ரூபாயை முடக்கி உள்ளோம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.


டவுட் தனபாலு: கண்டிப்பா, இந்த மோசடியை ஒரே நாள்ல இவங்களால செஞ்சிருக்க முடியாது... சில வருஷங்களாவது நடந்திருக்கும்... இதை எல்லாம், நம்ம உளவுத்துறை போலீசார் கண்டுபிடிக்கலையா அல்லது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு வேலை வைப்போம்னு, 'கம்'முன்னு இருந்துட்டாங்களா என்பது தான் எங்க, 'டவுட்!'



வாசகர் கருத்து (9)

  • PalaniKuppuswamy - sanjose,இந்தியா

    மனச்சாட்சி உள்ள மனிதன் மக்களின் நலனுக்கு பொறுப்பு எடுத்துக்கொண்டு ..TASMAC ஒருபக்கம் .அதை எதிர்க்காமல் அனுசரித்துக்கொண்டு பதவி முக்கியம் என்று பொதுநல வேடம் போடும் வாழ்வதை விட சாவதே மேல்

  • Jose Varghese - Columbus,யூ.எஸ்.ஏ

    பி. ஜே.பி இப்போதும் நேருவை குறை சொல்வதை விடவா இது பெரிது?

  • DVRR - Kolkata,இந்தியா

    "தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது". கொஞ்சம் எழுதத்துப்பிழை "55 ஆண்டுகளாக" என்று இருக்கவேண்டும். எப்போ திரூட்டு திராவிட ஆட்சி 1967 ல் ஆரம்பமானதோ அன்றிலிருந்து மது போதை போதை மருந்து போதை ஆரம்பமாகிவிட்டது. அறிவிலியின் உச்சக்கட்டமே, டாஸ்மாக் கடையை அரசு நடத்துகின்றது அது என்ன போதையில் சேர்த்தி இல்லையா????இந்த பிரகிருதி எல்லாம் அமைச்சர்???ஓஹோ ராஜ இவ்வலை அவர்கள் மந்திரிகள் அவ்வழியே என்பது மிக மிக தெளிவாக இந்த உளறலிருந்து தெரிகின்றது.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    போதை பொருள்கள் பொதுவெளியில் இவ்வளவு அதிகமாக நடமாடுவது உங்கள் ஆட்சியில் தானே? கடந்த பத்து ஆண்டுகளாக இப்படி இல்லையே. உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்.

  • Nakkeeran - Hosur,இந்தியா

    திமுக ஆட்ச்சிக்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது இப்போது என்ன குறைந்தா இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement