மருத்துவரின் ஸ்டெத்தாஸ்கோப் மூலமே நுரையீரல் நலம் பரிசோதிக்கப்படும். அதற்கடுத்து பெரிய கருவிகள் வந்தன.
ஆனால், நியூமோ வெஸ்ட் என்ற புதிய கருவியை, நோயாளி உடைபோல அணியலாம். எனவே அது, அவரது நுரையீரல் செயல்பாட்டை நாள் முழுதும் கண்காணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நியூமோ வெஸ்ட்டை ஜெர்மனியிலுள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிக் குழும விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த உடையில் பீசோசெராமிக் அக்கஸ்டி உணரிகள் உள்ளன. இவை, நுரையீரலில் எந்த இடத்தில், எந்த மாதிரியான ஓசை வருகிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து மருத்துவருக்கு தகவல் தருகிறது.
இது கோவிட் - 19 நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும், பிற சுவாச நோயாளிகளும் இதை அணிந்து பயன்பெறலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!