Load Image
dinamalar telegram
Advertisement

சிக்கனமான மாசு வடிகட்டி

நீரில் கலந்திருக்கும் கரிம மாசுகளை வடிகட்டி சுத்திகரிப்பது ஒரு பெரிய சவால். அந்த சவாலை சமாளித்து வென்று உள்ளனர் வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

அவர்கள் உருவாக்கியுள்ள ஒரு கலவைப் பொருள், நீரிலுள்ள கரிம மாசுகளை அடியோடு வடிகட்டிவிடுகின்றன.அந்த வடிகட்டி, ஒரு கிராபீன் தாளால் ஆனது. அதன் மீது, மிக நுண் துளைகள் கொண்ட கடற்பஞ்சு போன்ற பொருள் பதிக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாக நீர் கடக்கும்போது, மாசுகள் சிக்கிவிடுகின்றன.

கிராபீன் தாள் ஒரு அணு அளவுக்கே தடிமனானது. என்றாலும், அதன் பரப்பளவில் உள்ள துளைகள் சற்று பெரியவை. அந்த தாளின் மீது நேனோ துளைகள் கொண்ட கடற்பஞ்சு போன்ற பொருள் பதிக்கப்படும்போது, அதன் ஊடே வரும் தண்ணீரில் உள்ள மாசுகள் எளிதில் வடிகட்டப்படுகின்றன. இந்த வடிகட்டியை மீண்டும் பயன்படுத்தலாம். எனவே, மிக சிக்கனமான வடிகட்டியும் கூட.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement