சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: லஞ்சம் வாங்குவதில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின். சந்தர்ப்ப சூழ்நிலையால், அவர் முதல்வராகி விட்டார். மக்கள் பொருளாதாரத்தில் கஷ்டப்படும் நேரத்தில், மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு தேவையா?
டவுட் தனபாலு: முதல்வர் பதவிக்காக, பல வருஷங்களா பொறுமையா காத்திருந்து, மக்கள் ஓட்டு போட்டு தான் அந்தப் பதவிக்கு ஸ்டாலின் வந்திருக்கார்... ஆனா, நீங்க எப்படி, எந்த சூழலில் முதல்வர் பதவிக்கு வந்தீங்க என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இன்னும் இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தால், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும், விவசாயிகள், விசைத்தறிகள், குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். ஒழுங்குமுறை ஆணையத்தின் உரிமையை பறிப்பதாக இச்சட்டம் அமைந்திருக்கிறது. அதை 'வாபஸ்' பெறும் வரை, தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தும்.
டவுட் தனபாலு: இலவச மின்சாரத்தை எப்படா, 'கட்' பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்தீங்க... அதற்கு வாகா மத்திய அரசின் சட்டம் வந்திருக்கு... அப்புறம் என்ன...? 'டவுட்'டே இல்லாம, மத்திய அரசு மீது பழி போட்டு மக்கள் தலையில சுமையை ஏத்திட வேண்டியது தானே!
பீஹாரைச் சேர்ந்த, 'லோக் ஜனசக்தி - ராம்விலாஸ்' கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான்: ஒரு நேரத்தில் ஒருவருடன் கூட்டணி வைப்பது, பின் கூட்டணியை முறித்து மற்றொருவருடன் சேருவது. அவருடன் கூட்டணியை முறித்து, மீண்டும் பழைய கூட்டணிக்கே திரும்புவது என்பது என்ன அரசியல்? மக்கள் அளித்த தீர்ப்பை நிதிஷ்குமார் மீண்டும் அவமதித்துள்ளார். அவர் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்.
டவுட் தனபாலு: நிதிஷ்குமாரின் அரசியல் சித்து விளையாட்டுகளை நாலே வரியில நச்சுன்னு சொல்லிட்டீங்க... ஆனா, ஒண்ணு... எந்தக் கூட்டணிக்கு தாவினாலும், தன் முதல்வர் பதவிக்கு பங்கம் வராம பார்த்துக்கிறாரே... அந்த வகையில, நிதிஷ்குமார் அரசியல் சாணக்கியர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
சந்தர்ப்ப சூழ்நிலையால், முதல்வரானவர் யாரென்று தமிழ்நாடறியும்.