Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: ஆளுங்கட்சியின் செயல்பாடு சரியில்லாததால், மதுரை தி.மு.க.,வினர் பலர் அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ளனர். 'மது ஆலைகளை மூடுவோம்; நீட் தேர்வை ரத்து செய்வோம்' என, பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் சேர்த்தது, அக்கட்சி தொண்டர்கள் தான். இதனால், அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குடும்ப கட்சிக்கு உழைப்பதற்கு பதில், அ.தி.மு.க.,வுக்கு உழைப்போம் என்று, இங்கு வந்துள்ளனர்.


டவுட் தனபாலு: பொதுவாக, பழுத்த மரத்தை தேடித்தான் வவ்வால்கள் பறக்கும்... ஆனா, எதிர்க்கட்சியா இருக்கும் அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க.,வினர் வந்திருக்காங்க என்றால், மதுரையில் ஆளுங்கட்சி, 'வீக்'கா இருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:
முல்லை பெரியாறு அணையில், 142 அடி வரை நீரை தேக்க முடியாததற்கு, 'ரூல் கர்வ்' என்ற விதி தான் காரணம். இதன் காரணமாக, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளது. இந்த விதியை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.


டவுட் தனபாலு: சீக்கிரம் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, உங்க பலத்தை காட்டுங்க... யார் பின்னாடி அ.தி.மு.க., இருக்கிறது என்பது, 'டவுட்'டே இல்லாம உலகத்திற்கு தெரியட்டும்!


எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:
வெற்று விளம்பரத்திற்காக, 'மக்களை தேடி மருத்துவம்' என அறிவித்து, முதல்வரை வைத்து, 'போட்டோ ஷூட்' நடத்தி விட்டு, மருத்துவத்தை தேடி மக்களை அலைய வைக்கும் போக்கை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரம் கட்டி விட்டு, மக்களின் நலனுக்காக அ.தி.மு.க., அரசு அமல்படுத்திய, 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும்.


டவுட் தனபாலு: உங்க ஆட்சியில் துவங்கிய மினி கிளினிக்திட்டத்துக்கு தனியாக டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்கவே இல்லையே...அங்கங்க இருந்த அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களைத் தானே மாற்றுப் பணியா அனுப்புனீங்க... அதுக்கு போய் பெருமை அடிச்சுக்கலாமா என்பது தான் எங்க, 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர்கள் ஆளும்போது போட்ட ஆட்டத்தை இன்று அடுத்தவர் போகும்போது மட்டும்தான் விமர்சனம் வருகிறதோ ? நீட்டுக்காக கடிதம் எழுதி, நிராகரிப்பையும் மறைத்த சரித்திரம் எல்லாம் மறந்ததா ?

    • சி சொர்ணரதி - ,

      பழனிச்சாமி அவர்கள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது என்று உணர்ந்து அரசுப்பள்ளி மாணவர்கள் நலனை காப்பாற்ற உள் ஒதுக்கீடு கொண்டு வந்தார் .மேலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சியும் கொடுத்தார்.திமுக ஆட்சியில் நீட் விலக்கு பெற முடியாது என்று தெரிந்தும் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தான் மிச்சம்.மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சியும் லேட்டாக தான் ஆரம்பித்தனர்.நீட் தேர்வு விலக்கு ரகசியம் இன்னும் ரகசியமாகவே இருக்கின்றது....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement