Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நீர்வளத் துறையில் நடக்கும் திட்டங்கள் குறித்து குறை சொல்லி பேசி வருகிறார். எங்களை குறை சொல்வது ஒருபுறம் இருந்தாலும், காவிரி - -குண்டாறு இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி, சரபங்கா திட்டம், அத்திக்கடவு- - அவினாசி திட்டங்கள் எல்லாம், அவருக்கு ஞாபகம் இருக்கிறதே என்பதில் எனக்கு ஆச்சரியம்.

டவுட் தனபாலு: தமிழகத்துல எத்தனை ஆறுகள், குளங்கள் உள்ளன என்ற விபரங்கள் எல்லாம், உங்க விரல் நுனியில் மட்டும் தான் இருக்கணுமா... அவரும், 10 வருஷமா பொதுப்பணித் துறையை நிர்வகித்தவர் என்பதை நீங்க மறந்துட்டீங்களோ என்பது தான் எங்க, 'டவுட்!'

பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி: எங்களின் இலக்கு, தமிழகத்தில் கட்சியை பலப்படுத்துவதும், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும் தான். தி.மு.க., ஒரு காலத்தில், பா.ஜ.,வை கிண்டல் அடித்தது. தற்போது தமிழகத்தில், பா.ஜ., வளர்ச்சியை பார்த்து, தி.மு.க., பயப்படுகிறது.
டவுட் தனபாலு: இப்படி, வாரம் ஒரு முறை, தமிழகம் வந்து பேட்டி குடுத்துட்டு போயிட்டு இருந்தா, பா.ஜ., தானா வளர்ந்துடாது... உங்க கர்நாடக மாநிலத்துல, எடியூரப்பா எப்படி மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று கட்சியை வளர்த்தாரோ, அந்த மாதிரி செயல்ல இறங்கினா தான் கட்சி வளரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை: ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி, எடை போட்டு பார்த்தால், எடை குறைவாக இருக்கிறது. இது, ஊரறிந்த உண்மை. பால்வளத் துறை அமைச்சர் நாசர், தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கும் சூழலில், அந்த பதவியில் நீடிப்பது அழகா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
டவுட் தனபாலு: அவர் மேல அடிக்கடி புகார் சொல்லிட்டே இருந்தா, முதல்வர், 'டென்ஷன்' ஆகிட போறாரு... உடனே, நாசரை பால்வளத் துறையில இருந்து துாக்கி, வேற துறைக்கு அமைச்சராக்கிடுவாரு... பதவியை விட்டெல்லாம் துாக்க மாட்டாரு. ராஜகண்ணப்பன் விவகாரத்துல, நடந்ததை மறந்துட்டீங்களோ என்பது தான் மக்கள், 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அப்படி பால்வளத்துறை அமைச்சரை இறக்கினால் அவர் போட்டு உடைக்கும் பல உண்மைகளை அமுக்க யார் வருவார் ? ஒவ்வொரு அமைச்சரும் துறை மாற்றம் செய்து தன்னைக்கட்டி வைத்து நாலு வருஷத்தை ஓட்டியாக வேண்டுமே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement