Load Image
dinamalar telegram
Advertisement

'பலரும் அமாவாசை தானே!'

'பலரும் அமாவாசை தானே!'




-பெரம்பலுாரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.சிவபதி பேசுகையில், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று ஒப்பற்ற தலைவராக பழனிசாமி உள்ளார். பன்னீர்செல்வத்திற்கு தலைவருக்கான தகுதியில்லை. அவர், சொந்த நலனுக்காக, குடும்ப நலனுக்காக செயல்பட்டவர்.

'அமைதிப்படை அமாவாசை போல, ஏமாற்றியே வந்தவர் பன்னீர்செல்வம். அவர், அம்மா காலில் அடிக்கடி விழுவார். அவரது செயலால், அம்மாவே பலமுறை முகம் சுளித்திருக்கிறார்; நானும் பார்த்திருக்கிறேன்' என்றார்.
நிர்வாகி ஒருவர், 'இவரு என்னமோ காலில் விழாதவர் போல பேசுறாரு... அமாவாசை கேரக்டர் பன்னீர் செல்வத்திற்கு மட்டுமல்ல, நம்ம கட்சியில பலருக்கும், அது பொருத்தமா தான் இருக்கும்னு எல்லாருக்கும் தெரியுமே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்த நிர்வாகி அவரை முறைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    யப்பா, தாங்கல்லை அவராவது முதல்வர் காலில் விழுந்தார், உங்க தலைவர் யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்று ஊரில் அறியாதவர் இல்லை தெரியுமா?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement