Load Image
dinamalar telegram
Advertisement

'பயங்கர ஞாபக சக்தி!'

'பயங்கர ஞாபக சக்தி!'



சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை துவக்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில்,
ஐ.என்.எஸ்., அடையாறு வந்தார். பிரதமர் மோடியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி, நடிகை குஷ்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது, சக்கரவர்த்தி அருகில் வந்ததும், அவரின் கைகளை பிடித்த மோடி, 'வரும் போதெல்லாம் உன்னை பார்க்கிறேன்; உடல் எடையை குறைத்து, 'ஸ்லிம்' ஆகி வருகிறாய். கீப் இட் அப்' என்று, கூறியுள்ளார்.
நிர்வாகி ஒருவர், 'பிரதமர் மோடி நாடு முழுதும் வலம் வருகிறார். பல்வேறு பணிச்சுமைகளிலும், தமிழகத்தில் உள்ள சாதாரண கட்சி நிர்வாகி ஒருவரின் உடல் எடை குறைப்பை ஞாபகம் வைத்து கேட்கிறாரே... பயங்கர ஞாபக சக்தி பா...' என, பெருமைப்பட்டுக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இப்போதெல்லாம் தமிழகத்தின் மீது 'பாச மழை' பொழிவது எல்லாம், ஆட்டுக்கு மாலை போடும் தந்திரம்தான்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement