Load Image
dinamalar telegram
Advertisement

'பேனரை மாற்றி இருக்கலாமே!'

'பேனரை மாற்றி இருக்கலாமே!'






தேனி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின் மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், 'முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிக் குவிக்கை தெய்வமாக வழிபடுபவர்கள் தேனி மாவட்டத்தினர். அப்படி விசுவாசமானவர்கள் உள்ள மாவட்டத்தில், பன்னீர்செல்வம் போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக்கிறது.

'தேனி எம்.பி., ரவீந்திரநாத் தன் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால், நான் பொது வாழ்க்கையை விட்டு விலகுகிறேன். இது, அவருக்கு நான் விடுக்கும் சவால்' என்றார்.தொடர்ந்து அவர், பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் குறித்து மட்டுமே பேசினார். தி.மு.க., அரசை கண்டித்து ஓரிரு வரிகள் மட்டுமே பேசினார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் என பேனர் அடித்ததற்கு பதிலாக, பன்னீர்செல்வத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று பேனர் அடிச்சிருக்கலாம்... அது தான் இங்கு பொருத்தமா இருக்கும்...' என, முணுமுணுத்தபடி நகர்ந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement