Load Image
Advertisement

தவறான கொள்கையால் பற்றி எரியும் இலங்கை

அண்டை நாடான இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக, சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த மக்களின் எதிர்ப்பு, நேற்று முன்தினம் பெரிய அளவில் வெடித்தது. தலைநகர் கொழும்புவில் பலத்த பாதுகாப்புடன் கூடிய அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடி, அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அதற்கு சற்று முன்னதாகவே மாளிகையில் இருந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியேறி விட்டார். அவர், குடும்பத்தினருடன் தனி விமானம் அல்லது கப்பலில் வெளிநாடு தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வரும், 13ம் தேதி பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த, 2010ல் இருந்து, இலங்கை அரசின் வெளிநாட்டுக் கடன் கடுமையாக உயர்ந்தது.

2019ல், வெளிநாட்டுக் கடனின் அளவானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,88சதவீதத்தை எட்டியது. இந்தச் சூழ்நிலையில், 2020ம் ஆண்டில் கொரோனா பரவல் பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து, ஊரடங்கு அமலானதால், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. அத்துடன், விவசாயத் துறையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டிற்கு, இலங்கை அரசு ஒரேயடியாக தடை விதித்து,இயற்கை விவசாயத்தை மேம்படுத்த உத்தரவிட்டது. இதுவும், உணவுப் பொருட்கள் உற்பத்தியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

'ரசாயன உரங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கலாம்' என்ற யோசனையை அதிபர் ஏற்கவில்லை. இவை உட்பட பல பிரச்னைகளால், 2.2 கோடி மக்கள் தொகை உடைய இலங்கையில், அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டு, எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இவற்றை எல்லாம், மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். மேலும், எரிபொருள் பற்றாக்குறையால், மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவற்றை வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன், அடிக்கடி மின்வெட்டும் அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்த வகையில் மட்டும், பல நுாறு கோடிகளை சில நாடுகளுக்கு பாக்கியாக, இலங்கை அரசு செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த மாதத்தில், இலங்கையின் பொருளாதார பணவீக்கமானது, 54.6 சதவீத அளவுக்கு அதிகரித்தது. வரும் மாதங்களில் அது, 70 சதவீதத்தை தாண்டலாம் என அஞ்சப்படுகிறது. இலங்கை அரசின் தற்போதைய கடன், 52ஆயிரத்து 500 கோடியை எட்டி விட்டது. மொத்தத்தில் அரசு திவால் நிலைக்கு சென்று விட்டது. பணவீக்கம் அதிகரித்ததால், இலங்கையில் தற்போது, 60 லட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை நிலைமையில் உள்ளதாக, சமீபத்தில் ஐ.நா., சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் இலங்கையில் மாற்றம் நிகழ வேண்டும் எனில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ரசாயன உரங்களின் பயன்பாட்டை முழு அளவில் அகற்றாமல், குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் அதிக வருமானம் பெறும் வகையில், புதிய பண்ணை தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். இதுதவிர, விவசாயம் சாராத துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக, சுற்றுலா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும். சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் அதிக அளவில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளை கட்டும் போது, ஏராளமான சுற்றுலா பயணியர் இலங்கை வருவர். அவர்கள் வாயிலாக இலங்கை மக்களின் வருமானம் அதிகரிக்கும். இதுதவிர, வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை மாற்றி அமைப்பது உட்பட, வேறு பல நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் செய்தால் மட்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறையும். இந்த சீர்திருத்தங்களை எல்லாம் ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது என்றாலும், படிப்படியாக செய்வதன் வாயிலாக, மக்களின் இன்னல்களை குறைத்து, நாட்டில் அமைதியை உருவாக்கலாம். புதிதாக பதவியேற்க உள்ள அனைத்துக் கட்சி அரசானது, இதைச் செய்ய வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பு.வாசகர் கருத்து (31)

 • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

  லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றதினால் இழப்பு நடந்துள்ளது / நாடு பற்றி எரிகிறது என்று சொல்ல என்ன பயம்

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  இலங்கை போன்று இயற்கை விவசாயம் தான் செய்ய வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், இலவசங்களை அள்ளி கொடுக்க வேண்டும், அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும், அனைத்து நிறுவனங்களையும் அரசே நடத்தவேண்டும், அரசே விவசாயம் செய்ய வேண்டும், மானியங்கள் நிறைய கொடுக்க வேண்டும் என்று கூவும் நாம் டுமிழர் கட்சியின் சிறப்பு என்னான்னா, 18 வயதில் ஒரு இளைஞன் செபாஸ்டியன் சைமனின் உணர்ச்சி பொங்கும் பேச்சை கேட்டுவிட்டு ரத்தம் கொதிக்க நாம் டுமிழரில் சேருவான். அந்த இளைஞனுக்கு 23 வயது ஆகும்போது உலக அரசியல், உலக பொருளாதாரம் இவற்றை படித்து தெரிந்துகொண்டு இந்தாளு பின்னாடியா ஐந்து வருடங்கள் இருந்தோம்னு தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டு நாம் டுமிழரை விட்டு ஓடி விடுவான். அவ்வாறு ஓடி வரும் இளைஞன் 23 வயதில் இருந்து 25 வயது வரை சினிமா மோகத்தில் நம்மை காக்க வந்த ஒரே கட்சி ஆண்டவரின் (?) பகுத்தறிவு பகலவனின் (?) நம்மவரின் (?) மக்கள் நீதி மய்யம் என்று முடிவெடுத்து அதில் சேருவான். 25 வயதில்தான் அவனுக்கு தெரியவரும் நம்மவர் கமல் ஒரு டுபாக்கூர் என்றும் அரசியல் ஜோக்கர் என்றும் மற்றும் அந்த கட்சி கோமாளிகளின் கூடாரம் என்றும். 25 வயதில் தனது தாத்தா, அப்பா எவ்வாறு திருட்டு திமுக போன்ற ஊழல் திராவிட கட்சிகளால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சிந்தித்தும், குருமாவின் சிறுத்தை குட்டீஸ் போன்ற ஜாதி கட்சிகளால் தமிழகம் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதை சிந்தித்தும், தேசிய சிந்தனையுடன், ஊழல், லஞ்சம் அற்ற அரசு அமைய தன்னிச்சையாக சிந்திக்கும் திறன் பெற்று எந்த கட்சியில் சேருவான் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  இலங்கையின் இந்த புரட்சிக்கு முக்கிய காரணம்....குடும்ப அதிகார அரசியல்....தனிக்குடும்பம் அல்ல....ஒரு கூட்டுக்குடும்ப உறுப்பினர்கள் பட்டாளம் ....நாட்டின் வளங்களை தங்களுக்கென்று ஒதுக்கி சொகுசு வாழ்க்கை....இன வெறி....மாஸ் மர்டர்.....அதற்கு பில்லியன் டாலர் கடன் கொடுத்து உதவி செய்கிறது இந்தியாவை ஆளும் கட்சி....தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் என்று தினந்தோறும் அட்டாக்.....தரக்குறைவான சொற்பொழிவுகள்....இந்தியாவில் தாக்கி பேசுபவர்கள் லங்காவில் அப்பட்டமான வாரிசு அரசியலை தூக்கிப் பிடிப்பார்களாம்....

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தியா கிழித்தது என்ன நரேந்திர மோடி கேட்ட கேள்விக்கு பதில் - பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா -உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா -ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா -மாபெரும் அணைகளான பக்ரா நங்கல் மற்றும் ரிஹான்ட் அணைகளை கட்டியிருந்தது இந்தியா உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. - பாபா அணுசக்தி ஆய்வு மையத்தை திறந்திருந்தது இந்தியா - தாராபூர் அணு உலையிலிருந்து மின் உற்பத்தியை துவக்கியது இந்தியா இந்திரா காலத்திலேயே பொக்ரானில் முதல் அணு வெடிப்பு சோதனையை இந்தியா செய்தது. - டஜன் கணக்கிலான IIT, IIM மற்றும் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களில் இருந்து, படித்து முடித்த ஆயிரக்கணக்கான பட்டதாரி வல்லுநர்கள் , வெளிவரத் துவங்கி விட்டனர் , இந்தியாவில் - எண்ணற்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள் மூலம் , உற்பத்தியை துவக்கியிருந்தது இந்தியா - லாகூர் வரை ஊடுறுவி, எதிரிகளை துவம்சம் செய்தது இந்தியா பாகிஸ்தானை இரண்டாகப் பிளந்து பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி காட்டியது இந்தியா. போர்ச்சுக்கீசியரிடம் இருந்து கோவாவை பெற்றது இந்தியா - ஆர்யபட்டா பாஸ்கரா ரோகிணி எஸ்எல்வி பிஎஸ்எல்வி என விண்வெளி முஸ்தீபுகளை, இஸ்ரோ துவக்கியிருந்தது இந்தியாவில் அக்கினி என்ற ஏவுகணையும் தயாரித்திருந்தது. மேலும், 1947 இல் சுதந்திரம் வாங்கும் போது, இந்தியர்களின் சராசரி வயது 32, 2014ல் 67 சதமாக அதிகரித்துள்ளது. 1947 இல் சுதந்திரம் வாங்கி இந்தியா என்ற நாடு உருவாகியபோது, இந்தியாவில் படிப்பறிவு உடையவர்கள் 16%, 2014 இல் அது 74% சதமாக உயர்ந்துள்ளது. 1947 இல் சுதந்திரம் வாங்கும் போது, இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழிருந்தவர்கள் 70%, 2014 இல் அது 21% சதமாக குறைந்திருக்கிறது

 • அக்னீஸ்வரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா

  முதல்வர் சென்னையில் இல்லாத நாளில் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தியபோது ஒரு மாதத்திற்குள் எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்துவோம் என்று முழக்கமிட்டார் அண்ணாமலை. அந்த போராட்டம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் திருச்சி எங்கிருக்கிறது என்று அண்ணாமலைக்கு தெரியவில்லையா. அல்லது திருச்சியில் கூட்டம் சேர்க்கும் அளவுக்கு பாஜகவுக்கு செல்வாக்கு இல்லையா. வேல் யாத்திரை நடத்தியும் டெப்பாசிட் வாங்குவதற்கு கூட சிரமப்பட்டவர்கள் ஜனவரியில் ஆரம்பிக்க இருக்கும் பாதயாத்திரையில் காளியின் சூலாயுதத்தை ஏந்தி செல்வார்களா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement