Load Image
dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

தமிழக கவர்னர் ரவி:சர்தார் பட்டேல் எப்படி இந்த நாட்டை ஒன்றாக இணைக்க முயற்சி செய்தாரோ, அதே போலதான் ஜி.எஸ்.டி., என்ற, 'ஒரே நாடு ஒரே வரி' வாயிலாக நாடு ஒன்றிணைகிறது. தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., வாயிலாக, 1,500 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரித்து உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த, 25 ஆண்டுகளில், உலக அரங்கில் இந்தியா பலமான நாடாக இருக்கும்.


டவுட் தனபாலு: ஜி.எஸ்.டி.,யால தமிழகத்துக்கு கூடுதல் வருவாய் வந்துச்சுன்னு சொல்றீங்க... மாநில தி.மு.க., அரசோ, 'எங்களுக்குரிய பங்கை மத்திய அரசு தர மாட்டேங்குது'ன்னு புகார் வாசிச்சிட்டு இருக்குது... யார் சொல்றதை நம்புறதுன்னு தான், 'டவுட்'டா இருக்குது!


மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே:
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, பா.ஜ., ஆவலாக இருப்பதாக மக்கள் நினைத்தனர். பா.ஜ.,வுக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், முதல்வர் பதவியை எனக்கு வழங்க தேவேந்திர பட்னவிஸ் முடிவு செய்ததற்கு பெரிய மனது வேண்டும். இதன் வாயிலாக, அவர் புத்திசாலித் தனமான முடிவை எடுத்துள்ளார்.


டவுட் தனபாலு: முதல்வரா இருந்துட்டு, துணை முதல்வர் பதவியில அமர, தேவேந்திர பட்னவிஸ் ஒன்றும் எங்க ஊர் பன்னீர்செல்வம் இல்லை... உங்க பக்கத்துலயே அமர்ந்து, உங்களை கண்கொத்தி பாம்பா கண்காணிக்க தான், பா.ஜ., இந்த வியூகத்தை வகுத்திருக்குது என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?


பத்திரிகை செய்தி: எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னையில் ஆதரவு கேட்ட கூட்டத்தில், தி.மு.க., தரப்பு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அழைக்காமல், சட்டசபை கட்சி தலைவர்களை மட்டும் அழைத்ததால், அக்கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


டவுட் தனபாலு: அது சரி... சட்டசபையில இருக்கிற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு ஜால்ரா தட்டிட்டு வண்டியை ஓட்டிட்டு இருக்காங்க... வெளியில இருக்கிற அழகிரி மற்றும் கம்யூ., கட்சி தலைவர்கள், அரசுக்கு எதிரா அப்பப்ப லேசா முணுமுணுக் கிறாங்களே... அதனால, அவங் களை கழற்றி விட்டுட்டாங்களோன்னு, 'டவுட்' வருது!சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள, 2019ல் மறுத்த பா.ஜ., இப்போது சிவசேனாவைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியை அளித்துள்ளது. பா.ஜ., எங்களுக்கு இழைத்த துரோகத்தை போல, மஹாராஷ்டிரா மக்களுக்கும் துரோகம் இழைக்காமல் இருந்தால் சரி தான்.


டவுட் தனபாலு: துரோகத்தை பற்றி நீங்க பேசலாமா...? 2019 தேர்தலப்ப, பா.ஜ.,வுடன் சேர்ந்து மக்களிடம் ஓட்டுகளை வாங்கினீங்க... ஆனா, உங்க கூட்டணிக்கு எதிரா ஓட்டு போட்ட காங்., - தேசியவாத காங்., கட்சிகள் தயவுல, முதல்வர் பதவியில நீங்க அமர்ந்ததற்கு பெயர் தியாகமா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தர முடியுமா?


சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் ரவீந்திரநாத்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், டாக்டர்களின் கோரிக்கை நிறைவேறும்' என, ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், விரக்தியடைந்த டாக்டர்கள், சேலம் மாவட்டம், மேட்டூரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு அதிகாரிகள், பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடித்து, டாக்டர் சங்கங்களை பிளவுபடுத்துகின்றனர். இது, சரியான அணுகுமுறை இல்லை.


டவுட் தனபாலு: தி.மு.க.,வை பற்றி உங்களுக்கு தெரியாதா...? தங்களுக்கு சரிப்பட்டு வராத கட்சிகளை, சங்கங்களை உடைப்பது, பிளவுபடுத்துவது எல்லாம், அவங்களுக்கு கைவந்த கலையாச்சே... கருணாநிதி காலத்து தி.மு.க., பல விஷயங்கள்ல மாறியிருந்தாலும், இந்த பிரிவினை சூழ்ச்சியில் மட்டும் மாறவே இல்லை என்பது, 'டவுட்'டே இல்லாம விளங்குது!


பத்திரிகை செய்தி: தமிழகத்தில், இம்மாதம் வீட்டு சமையல் காஸ் விலை மாற்றப்படாத நிலையில், வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இதன்படி, வணிக சிலிண்டர் விலை, 2,373 ரூபாயில் இருந்து, 187 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


டவுட் தனபாலு: விலை குறைப்பு நல்ல விஷயம் தான்... இது தொடர வேண்டும்... அதே நேரம், விலை உயர்வை காரணம் காட்டி, டீ, காபி மற்றும் உணவு பண்டங்கள் விலைகளை, ஹோட்டல் உரிமையாளர்கள் தாறுமாறா ஏத்தினாங்களே... இப்ப, கொஞ்சம் குறைக்க முன்வருவாங்களா என்பது தான், 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (4)

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    ஒரே வரி வாயிலாக நாடு ஒன்றிணைகிறது என்ற தத்துவம் வரலாற்றில் யாரும் சொல்ல கேள்விப்பட்டதில்லையே.. இதற்கு ஆதரவாக அந்த மாமனிதர் காந்தியின் வழிகாட்டி, சர்தார் வல்லபாய் படேல்.. அவரு இதைக்கேட்டார்னா வாழ்க்கையையே வெறுப்பாரு... ஒரே தேசம், பல ஆளுநர்கள் தேவையில்லையே...

  • sankar - சென்னை,இந்தியா

    யுவர் எக்ஸன்ஸி மிஸ்டேர் ரவி. குஜராத் முதல்வரா நம்ம மோடி இருந்தபோது ஜி.எஸ். டி யை எதிர்த்து பற்றி உங்களுக்கு தெரியுமான்னு டவுட் வருதே.

  • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

    . மாநில பங்கீட்டை பகுதி பகுதியாகத்தான் GST கமிட்டீ தருவார்கள். மத்திய அரசுக்கு இதில் சம்பந்தம் இல்லை.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement