Load Image
dinamalar telegram
Advertisement

'என்ன கொடுமை எல்லாம் நடக்குமோ!'

'என்ன கொடுமை எல்லாம் நடக்குமோ!'அ.தி.மு.க.,வின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து, அக்கட்சியின் கடலுார் மேற்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான அருண்மொழிதேவன் கூறுகையில், 'அ.தி.மு.க.,வில், இனி ஒற்றை தலைமை தான். அது, தி.மு.க.,வை எதிர்க்கும் பழனிசாமி தான். இதை வரும், 11ம் தேதி பொதுக்குழு தீர்மானிக்கும்.
'சினிமா பாணியில் சொல்ல வேண்டுமானால், உதயநிதி நடித்த, நெஞ்சுக்கு நீதி படம் போன்றவர் பன்னீர்செல்வம். அமைச்சர்கள், ஆளும் கட்சியினர், எவ்வளவு வரிந்து கட்டியும் அப்படம் ஓடவில்லை. பழனிசாமியோ, கமல் நடித்த விக்ரம் படம் போன்றவர். அந்தப் படம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன்

நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது' என்றார்.இளம் நிருபர் ஒருவர், 'இதெல்லாம் வாய் உதாரணமா மட்டும் இருக்கட்டும்... உதயநிதி போல, பன்னீருக்கு போலீஸ் உடை அணிவிச்சும், பழனிசாமியை விக்ரம் பட கமல் போல சித்தரிச்சும், பேனர் எதுவும்
அடிச்சிடாதீங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மூத்த நிருபர் ஒருவர், 'இன்னும் என்ன கொடுமையெல்லாம் நடக்குமோ...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

'நல்லதா போச்சுன்னு நினைப்பாங்களே!'காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.நெடுஞ்சாலைத் துறை மீதான மனுவை, தனிநபர் ஒருவரிடம் பெற்று, சம்பந்தப்பட்ட துறை பெண் அதிகாரியிடம், கலெக்டர் கொடுத்தார். அந்த மனு மீது சந்தேகம் கேட்ட போது, பெண் அதிகாரி பதில் கூறாமல் திருதிருவென முழித்தார்.
கடுப்பான கலெக்டர், 'நெடுஞ்சாலைத் துறையினர், எந்த கூட்டத்திலும் பங்கேற்பதில்லை. பங்கேற்றாலும், கேட்கும் சந்தேகங்கள் எதற்கும் பதில் சொல்வதில்லை. பொதுமக்கள் எடுத்து வரும் மனுக்கள் மீது, பதில் அளிக்க தெரியாத யாரும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்' என, அந்த அதிகாரியை வறுத்தெடுத்தார்.பார்வையாளர் ஒருவர், 'என்ன இந்தம்மா இப்படி சொல்லிட்டாங்க... நல்லதா போச்சுன்னு நம்ம அதிகாரிங்க அடுத்த கூட்டத்துக்கு வர மாட்டாங்களே... 'சஸ்பெண்ட்' ஆயிடுவீங்கன்னு மிரட்டுங்க மேடம்... தன்னால எல்லா விளக்கமும் தருவாங்க...' என, முணுமுணுத்தபடி நகர்ந்தார்.

தலைவர்களை மறந்த தொண்டர்கள்அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பன்னீர்செல்வம் தரப்பினர் கூட்டத்திற்கு வரவில்லை; பழனிசாமி தரப்பினர் பங்கேற்றனர்.கட்சி அலுவலகத்தில் கூடியிருந்தவர்கள், பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர். 'கட்சியின் பொதுச்செயலர், இரும்பு மண்ணில் பிறந்த கரும்பு மனிதன்' என்றெல்லாம், வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களை யாரும் கூறவில்லை. அதேபோல, பழனிசாமி கட்சி அலுவலகம் வந்தபோது, நிர்வாகிகள் போட்டி போட்டு அவருக்கு பூங்கொத்துகளை வழங்கினர்.அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மீது, பழைய மாலைகள் மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தன. இதைக்கண்ட மூத்த தொண்டர் ஒருவர், 'நிர்வாகிகள் தான் தலைவர்களை மறந்தனர் என்றால், தொண்டர்களும் யாரை வாழ்த்தினால் காரியம் நடக்கும் என தெரிந்து கோஷமிடுகின்றனர்...' என புலம்பியவாறு நடையை கட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இன்னும் கொஞ்ச நாளில் 'அதிமுக பழனிசாமியால் தான் ஸ்தாபிக்கப்பட்டது' என்று கூற ஆரம்பித்தாலும் வியப்பில்லை

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement