Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி: தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளும் பங்காளிகள். எங்களுக்குள் பகைமை இருக்கும். ஆனால், வேறு கட்சிகள் உள்ளே நுழைய முடியாது. இதை நீர்த்துப் போக செய்யும் வேலைகளில், பன்னீர் செல்வம் இறங்கியுள்ளார்.


டவுட் தனபாலு: தமிழகத்துல, 55 வருஷங்களா உங்க ராஜாங்கம் தானே நடக்குது... நீங்க, அவங்களை பழி சொல்றதும், அவங்க, உங்களை வசைபாடுறதுமா நிஜமான எதிரிகள் போலவே மக்கள் மத்தியில நடிக்கிறீங்க... 'பந்தியில நாங்க மட்டும் தான் சாப்பிடணும்... மத்தவங்களுக்கு இடமில்லை என்பதில் ரெண்டு கட்சிகளும் ஒற்றுமையா இருக்கோம்' என்பதை, 'டவுட்' இல்லாம விளக்கிட்டீங்க!


முதல்வர் ஸ்டாலின்: நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் சொல்கின்றனர். அரசியலில், 55 ஆண்டுகளாக உள்ள எனக்கு, எந்த விளம்பரமும் தேவையில்லை. 27 சதவீத இட ஒதுக்கீட்டை, யார் பெற்று தந்தது என நினைத்தால், என் முகம் நினைவுக்கு வரும். அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டம், சமத்துவ நாள் அறிவிப்பு, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம் என்றால், என் முகம் தான் நினைவுக்கு வரும். நான் எதற்கு விளம்பரம் தேட வேண்டும்?


டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... பெண்கள் தினமும் காஸ் அடுப்பை பத்த வைக்கும்போது, 'சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் என்னாச்சு'ன்னு, நீங்க தான் நினைவுக்கு வருவீங்க... வறுமையில சிரமப்படும் மகளிர் எல்லாம், 'உரிமை தொகை 1,000 ரூபாய் எப்ப வரும்'னு உங்களை நினைப்பாங்க... 'பழைய பென்ஷன் திட்டம் எப்ப வரும்'னு, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தினமும் உங்களை நினைச்சிட்டு தான் இருக்காங்க என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை!


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை: பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கட்டாயம் நடத்த வேண்டும். பள்ளிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை, மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.


டவுட் தனபாலு: பள்ளி விழாக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை அழைக்கிறதுல தப்பில்லை... ஆனா, அவங்க, தங்களது தலைவர்களை போற்றி பாடிட்டு இருப்பாங்களே... அதெல்லாம், பள்ளி குழந்தைகள் படிப்புக்கு எந்த வகையில் பயன்படும் என்பது தான் எங்க, 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (8)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ஆமாம், சொல்லிப்புட்டோம், நாங்க அங்காளி, அப்பங்காளிகளா இருந்து முறை போட்டுக்கொண்டு மாநிலத்தை சுத்தமாக சுரண்டி முடிப்போம். வேறு யாருக்கும் இங்கு இடமில்லையாக்கும்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அது மட்டுமா? போலீஸ் லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களும் கூட, 'போலீஸ் மந்திரி' யான உங்களை காலம் காலமாக நினைத்துக்கொண்டே இருக்கும்

 • Bala - chennai,இந்தியா

  என்னை கேட்டால் முனிசாமி திமுக அதிமுக பங்காளிகளை இணைக்கும் வேலையை செய்யலாம். ஏனென்றால் திரு அண்ணாமலை என்ற சிங்கத்தின் பின்னால் தமிழகம் இன்று சென்றுகொண்டிருக்கிறது. இனிமேல் எல்லாம் BJP VS THE REST IN TAMIL NADU

 • sankar - சென்னை,இந்தியா

  நம்ம முன்ஸாமி ஸொல்றது நெஜம் தான். டவுட்டே இல்லை.

 • Ravanan Ramachandran - Chennai,இந்தியா

  திருமணம் நடந்து பத்து மாதங்களுக்கு பிறகு தான் குழந்தை பிறக்கும்....ஆட்சிக்கு வந்து பதினைந்து மாதங்கள் தான் ஆகின்றது. அதற்குள் எல்லாவற்றையும் யாரும் நிறை வெற்ற முடியாது.படிப்படியாக செய்து கொண்டு தான் வருகின்றார்...ஒரே வருடத்தில் அனைத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும்? எப்படி எதிர்பார்க்கமுடியும்? அவ்வாறு எதிர்பார்ப்பவர்கள் அறிவு அற்றவர்கள் என நினைக்க வேண்டியுள்ளது ...

 • John Miller - Hamilton,பெர்முடா

  பழைய பென்ஷன் திடடத்தை மறுபடியும் மோடியின் ஒன்றிய அரசு செயல்படுத்தினால் தமிழக அரசும் அதை பின்பற்றும்.

  • venkat - CHENNAI,இந்தியா

   என்ன ஒரு பதிவு .. தேர்தலின் போது இப்படி சொல்லவில்லையே ... பொய் சொல்வதில் நீங்களும் வல்லவர் தான் போல ..

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   அவங்கதான் (மோடி அரசு) பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த மாட்டேன்னுதானே ரொம்ப நாளா சொல்லிட்டிருக்காங்க ? அவங்களை கேட்டா, திருடர்கள் முன்னேற்ற கழகம் வாக்குறுதி அளிச்சிது ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement