Load Image
dinamalar telegram
Advertisement

ரொம்பத் தான் ஆசை!

ரொம்பத் தான் ஆசை!



'கிடைத்த பதவியை வைத்து சந்தோஷப்படுவதை விட்டு, இப்படி கவலைப்படுவது நியாயமா...' என்று காங்கிரசின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பவன் கெராவைப் பார்த்து கேட்கின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.பவன் கெரா, பழுத்த அரசியல்வாதி. பேச்சாற்றல் உடையவர். சில ஆண்டுகளுக்கு முன், 'டிவி' விவாதங்களில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றார். எதிர்தரப்பு முன்வைக்கும் வாதங்களை, தன் திறமையால் தகர்த்து, காங்கிரஸ் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து, காங்., செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஊடகங்களிலும், பொது வெளிகளிலும், காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கிப் பேசி வந்தார். இவரது பேச்சாற்றலைப் பார்த்து, பா.ஜ.,வினரே ஆச்சரியப்பட்டனர்.

அதற்கு பரிசாகத் தான், சமீபத்தில் அவருக்கு கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பதவி தரப்பட்டது. பவன் கெராவின் நண்பர்கள், அவரை பாராட்டு மழையில் நனைய வைத்தனர். ஆனாலும், பவன் கெராவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தென்படவில்லை; குழப்பமடைந்த நண்பர்கள், அவரிடம் விசாரித்தனர்.
அப்போது தான், ராஜ்யசபா எம்.பி., பதவியை காங்கிரஸ் மேலிடம், தனக்கு தரும் என, அவர் எதிர்பார்த்து இருந்தது தெரியவந்தது. 'இரண்டு மாநிலங்களில் தான் காங்., ஆட்சி நடக்கிறது; இதில், எத்தனை பேருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை தர முடியும். பவன் கெரா, ரொம்பத் தான் ஆசைப்படுகிறார்...' என புலம்புகின்றனர், பதவி கிடைக்காத காங்., நிர்வாகிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement