சொந்த ஊரும் போச்சே!
'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்கிறதே நம் நிலைமை...' என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியினர்.இந்தாண்டு பிப்ரவரியில், இம்மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார், பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத்.முன்னதாக, சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், அந்த கட்சியின் மூத்த தலைவர் அசம் கானும் போட்டியிட்டனர். இதற்காக, ஆஜம்கர் தொகுதியின் எம்.பி., பதவியை அகிலேஷும், ராம்பூர் தொகுதியின் எம்.பி., பதவியை அசம் கானும் ராஜினாமா செய்தனர். சட்டசபை தேர்தலில் அகிலேஷும், அசம் கானும் வெற்றி பெற்றாலும், அவர்களது கட்சி படுதோல்வி அடைந்தது.
அவர்களின் ராஜினாமாவால் காலியான, லோக்சபா தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. ஆஜம்கர், அகிலேஷ் யாதவின் சொந்த தொகுதி; ராம்பூர், அசம் கானின் கோட்டை. இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு போட்டியாக, பலம் வாய்ந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
இரண்டு தொகுதிகளிலுமே எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, அகிலேஷ் யாதவ் நினைத்தார். ஆனால், இரு தொகுதிகளிலும் படுதோல்வியே பரிசாக கிடைத்தது; பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். 'சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியாத நாம், இனி எந்த தொகுதியில் தான் வெற்றி பெற முடியும்...' என்று அகிலேஷ் யாதவும், அவரது ஆதரவாளர்களும் புலம்புகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!