Load Image
dinamalar telegram
Advertisement

'மக்கள் மறந்திட வேண்டியது தான்!'

'மக்கள் மறந்திட வேண்டியது தான்!'



புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அமைச்சர் நேரு கூறுகையில், 'நகராட்சி, பேரூராட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, இரண்டு ஆண்டுகளாக, 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது; அதில் தான் பணிகள் நடைபெறுகின்றன. நகராட்சிகளில் காலி பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. அரசு மிகப்பெரிய நிதிச் சுமையில் உள்ளதால், நிதிநிலைமை சரியானதும், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் முதல் துறை உள்ளாட்சி தான்... அங்கு காலி பணியிடங்களை நிரப்பவே, நிதிநிலை சீராகணும்னா, நீங்கள் கொடுத்த மகளிர் உரிமை தொகை, மாதாந்திர மின் கணக்கீடு போன்ற தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம், மக்கள் மறந்திட வேண்டியது தான்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement