Load Image
dinamalar telegram
Advertisement

'அது யாரா இருக்கும்?'

'அது யாரா இருக்கும்?'


கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் மதுரையில் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், 'மாலை, சால்வை மற்றும் மரியாதைக்காக, ஆண்டுகளை கடத்தும் சாதாரண அமைச்சர் நான் இல்லை. இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுள்ள அமைச்சர்; இதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம்.'ஒரு சி.இ.ஓ., தெரியாமல் தவறு செய்தால், அவர் குறித்து இல்லாததும், பொல்லாததும் கூடுதலாக கூறி வதந்தியை கிளப்பக் கூடாது. அரசியல்வாதிகள் அரசின் அச்சாணிகள் என்றால், அதை பாதுகாப்பது அதிகாரிகளாகிய நீங்கள் தான். நீங்கள் கையெழுத்திட தாமதிக்கும் ஒவ்வொரு கோப்புக்கு பின்னும், ஒருவரின் எதிர்காலம் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'நான் சாதாரண அமைச்சர் இல்லைன்னு சொல்றாரே... அப்ப ஸ்டாலின் அமைச்சரவையில் ஆண்டுகளை கடத்தும் சாதாரண, 'டம்மி' அமைச்சர்கள் சிலர் இருக்காங்கன்னு தானே அர்த்தம்... அது யாரா இருக்கும்...?' என முணுமுணுக்க, மற்றவர்கள், 'உம்...' என உதட்டை பிதுக்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அதாவது, 'நான் ஸ்டாலின் குடும்பத்து செல்லப்பிள்ளை ' என்கிறார். மற்ற, நாலைந்துமுறை அமைச்சராக இருந்தவர்களெல்லாம்< இன்று மற்ற துறைகளின் அமைச்சர்கள் எல்லாம் உதவாக்கரைகள் என்கிறாரா? அல்லது, மாலை, சால்வை என்று வீணாக்காமல், கலெக்ஷன்களை ஒழுங்காக சேர்க்கும் 'பணிக்கு' அதிகாரிகளின் ஒத்துழைப்பை கேட்கிறாரா ? டவுட் தனபால் தான் தீர்ந்து வைக்க வேண்டும் இதையும் 😀

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement