Load Image
dinamalar telegram
Advertisement

கொந்தளிக்கும் மக்கள்!

'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக உள்ளதே...' என, தெலுங்கானா மக்கள் புலம்புகின்றனர்.

இம்மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் போது, எல்லாவிதமான அத்துமீறல்களிலும் ஈடுபடுவது, ஆளுங்கட்சியினருக்கு வழக்கம் தானே; இதற்கு சந்திரசேகர ராவும் விதிவிலக்கல்ல.

தெலுங்கானாவில், 33 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் வாராங்கல், ஹைதராபாத் ஆகிய இரு மாவட்டங்களை தவிர மற்றவற்றில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு அலுவலகங்கள் உள்ளன. இதையடுத்து, இந்த இரண்டு மாவட்டங்களிலும், பிரமாண்ட அலுவலகங்களை கட்ட சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். ஹைதராபாதில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதி, வி.வி.ஐ.பி.,க்கள் குடியிருக்கும் இடம். தெலுங்கானா மாநிலத்திலேயே, நிலத்தின் மதிப்பு அதிகம் உள்ள பகுதி இது.

இங்கு ஆளுங்கட்சிக்கு அலுவலகம் கட்ட, ஒரு ஏக்கருக்கும் சற்று அதிகமான நிலத்தை அந்த மாவட்ட கலெக்டர் ஒதுக்கியுள்ளார். பணிகளை விரைவாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம், தெலுங்கானா மாநில அரசியலில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

'அரசியல் கட்சிக்கு அலுவலகம் கட்ட, அரசு நிலம் தான் கிடைத்ததா? வேறு இடமே இல்லையா? ஆளுங்கட்சியினர் என்றால், எது வேண்டுமானாலும் செய்வரா...' என கொந்தளிக்கின்றனர் தெலுங்கானா மக்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • திராவிட மாயை - Paris,பிரான்ஸ்

    திராவிட மாடல்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement