Load Image
dinamalar telegram
Advertisement

எங்கு முறையிடுவது?

'தேர்தல் நெருங்கும் நேரத்தில், இப்படி காலை வாருகின்றனரே...' என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா.


இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. வசுந்தராவுக்கும், பா.ஜ., மேலிட தலைவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் முதல்வர்வேட்பாளராக வசுந்தரா அறிவிக்கப்படுவாரா என்ற சந்தேகம்எழுந்தது.

உடனடியாக சுதாரித்த வசுந்தரா, சில மாதங்களுக்கு முன் டில்லி சென்றார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, சமாதானம் அடைந்த மூத்த தலைவர்கள், சாதகமான பதிலைக் கூறி, வசுந்தராவை அனுப்பி வைத்தனர். ராஜஸ்தான் திரும்பிய வசுந்தரா, 'இந்த தேர்தலிலும் நான் தான் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர்...' என்று தன் ஆதரவாளர்களிடம் கூறி வந்தார்.

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜஸ்தான் மாநில பா.ஜ., தலைவர் சதீஷ் பூனியா, 'சட்டசபை தேர்தலில், பிரதமர் மோடி பெயரை சொல்லித் தான் ஓட்டுக் கேட்போம். வேறு யாருடைய பெயரையும் முன்னிலைப் படுத்த மாட்டோம்...' என்றார். இதையறிந்த வசுந்தரா, 'அப்படியானால், நான் முதல்வர் வேட்பாளர் இல்லையா; கடைசி நேரத்தில் இப்படி செய்தால் எங்கு போய் முறையிடுவது...' என, கண்களை கசக்குகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • sethusubramaniam - chennai,இந்தியா

    சிந்தியா சிந்திடும் வியர்வையும் , சிந்தும் கண்ணீரும் பலன் தருமா ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement