Load Image
dinamalar telegram
Advertisement

வெள்ள தடுப்பு பணிக்குரூ.184.22 கோடி ஒதுக்கீடு



சென்னை,
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில், வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள, 184.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது, சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில், பல பகுதிகளில் ெவள்ள நீர் தேங்கி, மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் நேரடியாக பார்வையிட்டு, வெள்ள நீரை ெவளியேற்றவும், வருங்காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், மழையின்போது அதிகம் பாதிக்கப்படும் எட்டு பகுதிகளில், உடனடியாக பணிகளை மேற்கொள்ள, கருத்துரு தயார் செய்யப்பட்டது.அதேநேரம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், வெள்ள பாதிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இக்குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சில ஆலோசனைகளை வழங்கியது.அதன் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு பணிகளை மேற்கொள்ள, 184.22 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அரசுக்கு கடிதம் அனுப்பினார்.அதை பரிசீலனை செய்த அரசு, வெள்ள நீர் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, 184.22 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுஉள்ளது.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement