Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

முதல்வர் ஸ்டாலினிடம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி., அளித்த மனு: தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் தங்களுக்கும், தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறைக்கும் பாராட்டுக்கள். தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் செயல்படும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும். போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: உங்க தந்தையோ, ஆட்சியை விமர்சனம் செஞ்சிருக்கார்... நீங்களோ அதுக்கு நேர்மாறா, முதல்வரையும், அரசையும் பாராட்டி தள்ளுறீங்களே... அ.தி.மு.க.,வுல ஒற்றை எம்.பி.,யா இருந்து ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியால், மாற்று வழியை தேடுறீங்களோன்னு, 'டவுட்' எழுது!

***

முதல்வர் ஸ்டாலின்: எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நம் அரசின் நோக்கம். அதற்கு எல்லாத் துறைகளும் ஒன்று போல முன்னேற்றம் காண வேண்டும். கோட்டையில் தீட்டப்படும் திட்டங்கள், கடைக்கோடி மனிதரையும் சென்று சேர, சீரான ஒருங்கிணைப்பு தேவை.

டவுட் தனபாலு: எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என சொல்றீங்க... உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் கிடைக்கிற வசதி, வாய்ப்புகள், மருத்துவ சேவைகள், கடைக்கோடி தமிழனுக்கும் கிடைக்கிறதா என, நெஞ்சை தொட்டு சொல்லுங்க பார்ப்போம்... அது என்றைக்கு நடக்குதோ, அன்றைக்கு உங்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!

***

-அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில், முதன்மை மாநிலமாக இருந்த தமிழகம், ஒரே ஆண்டில் சாராய பாட்டில்களை பதுக்குவதில், முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சாராய பாட்டில்கள், சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்ட தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இது, 'திராவிட மாடல்' ஆட்சியை படம் பிடித்து காட்டுகிறது.

டவுட் தனபாலு: 'திராவிட மாடல் ஆட்சி'யை பா.ஜ.,வினர் தான் கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க... இப்ப, நீங்களும் களத்துல குதிச்சிட்டீங்க போல... ஆனா, பா.ஜ., எதிர்ப்புல இருக்கிற காரசாரம் உங்க தரப்பில் கொஞ்சம் கம்மி தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • sethusubramaniam - chennai,இந்தியா

    அவரவர்கள் தொகுதி மேம்பாட்டுக்கு , கட்சி பேதமின்றி முதல்வர்களிடமோ, பிரதமரிடமோ கோரிக்கை வைப்பது வழக்கமானதுதான். இதற்கு அரசியல் சாயம் பூசி சந்தேகப்படவேண்டியதில்லையே.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எதிர்க்கட்சி என்று இருப்பதால் லேசாகவாவது அடிக்குரலில் விமர்சிக்க வேண்டாமா? பிள்ளையாண்டானானால் முதல்வரிடம் குழைந்திருக்கிறார்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement