சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன் பாளையத்தில், உலகிலேயே மிக உயரமாக, 146 அடி உயர முருகன் சிலை உள்ளது. அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தன் பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பத்தினருடன் அங்கு சென்று வழிபாடு செய்தார்.
குதிரை, ஒட்டகம், பசு மாடுகளுடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக தீர்த்த கலசம் எடுத்துச் சென்று, முருகன் கையில் உள்ள வேலுக்கு பால் அபிஷேகம் செய்து, கையில் வேல் வாங்கி வழிபாடு நடத்தினார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க., பொதுக்குழு, உயர்மட்டக்குழு கூட்டம் சிறப்பாக நடக்கவும், கட்சியில் தொடர்ந்து உயர் பதவி கிடைக்கவும், கோவிலில் அவர் சிறப்பு பூஜைகளை நடத்தியதாக, கட்சியினர் கூறினர்.
பக்தர் ஒருவர், 'பொதுக்குழு சுமுகமாக முடியணும்னு வேண்டினாரா... இல்ல கோடநாடு வழக்குல நமக்கு எதுவும் சிக்கல் வந்துடக் கூடாதுன்னு வேண்டினாரான்னு அந்த முருகனுக்கு தான் வெளிச்சம்...' என, முணுமுணுத்தபடி நடையை கட்டினார்.
இப்ப பார்த்து தூத்துக்குடியைக் கிளப்பியிருக்காங்க, அந்தம்மா வேற கொடநாடு கேசில் சாட்சி சொல்லியிருக்காங்க முருகா, பதவி கிடக்கட்டும், 'உள்ளே' போயிடாம காப்பாத்துப்பா என்று வேண்டியிருப்பார்