காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த தலைவர் இல்லாமல்லி தலைமையில் நடந்தது. தலைவரின் மகன் சுகுமார், கவுன்சிலராக இல்லாத போதிலும், 'ஆக்டிங்' தலைவராக பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில், 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முகமது இஸ்மாயில் பேசுகையில், 'ராஜவீதி குறுக்கு தெருவில், சாலை அமைக்க வேண்டும்' என்றார். செயல் அலுவலர் பிரேமா, 'வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றியதும், சாலை அமைக்கப்படும்' என, பதிலளித்தார்.
அப்போது பேசிய சுகுமார், 'வார்டுக்கு தேவையான வேலைகளை, என்னிடம் அறையில் எழுதிக் கொடுத்து விட்டு, இங்கு கூட்டத்திலும் பேசலாமா?' என்று, இஸ்மாயிலிடம் கேட்டார்.
இளம் நிருபர் ஒருவர், 'தலைவரம்மாவுக்கு மகன், 'வாய்ஸ்' கொடுக்கறாரு... அவங்க பேச மாட்டாங்களா?' என அப்பாவியாய் கேட்க, மூத்த நிருபர் ஒருவர், 'இந்த திராவிட மாடல் அரசில், இதெல்லாம் சகஜம்...' என 'கமென்ட்' அடிக்க, அனைவரும் சிரித்தனர்.
முதல்வரே பாவம் நிழலாகத்தானே இருக்கிறார் மகன் விண்ணப்பம் வாங்குவது, ஏனைய 'வாங்குவது' எல்லாம் கவனிப்பார். அம்மா சும்மா …..😀