அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்கள், சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில், ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சி வந்ததும், ஊதிய உயர்வு கிடைக்கும்; பல ஆண்டு கோரிக்கையான பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உட்பட அனைத்தும் நிறைவேறும் என, எதிர்பார்த்தோம்.
ஆனால், இந்த அரசு எங்களுக்கு புதுசா எதுவும் தராததுடன், வழக்கமாக தரும் அகவிலைப்படி உயர்வையும் நிறுத்தி விட்டது' என்றார்.அவ்வழியாக சென்ற எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர், 'இதெல்லாம் சும்மா டிரெய்லர் தாம்மா... நாலு வருஷம் முழுசா இருக்குல்ல... இனிமே தான் நீங்கல்லாம்... தி.மு.க.,வோட மெயின் பிக்சரை பார்க்கப் போறீங்க...' என, படையப்பா பட பாணியில், 'கமென்ட்' அடித்து, ஊழியர்களை வெறுப்பேற்றி சென்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!