அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: தி.மு.க., பெண் கவுன்சிலர்கள், நகராட்சி பெண் தலைவர்கள், மாநகராட்சி பெண் மேயர்கள் ஆகியோரின் பணியை, அவர்களின் கணவர்கள் செய்கின்றனர். மதுரை மாநகராட்சியில், மேயர் இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. மதுரை மாநகராட்சியில் முன் வரிசையில் இடம் அளிக்கப்படாததை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
டவுட் தனபாலு: ஏதோ உங்க ஆட்சியில நடக்காத அலங்கோலமா இப்போது நடக்கிறது? இந்த விஷயத்தில் நீங்கள் போட்ட கோட்டில் தான், தி.மு.க., ரோடு போடுகிறது என்பதில், 'டவுட்' இல்லை. எனினும், இந்த விவகாரத்தை இரும்புக் கரம் கொண்டு, முதல்வர் அடக்க வேண்டும் என்பதிலும் எந்த, 'டவுட்'டும் இல்லை!
பத்திரிகை செய்தி: கேரளாவில் ஆசிரியராக பணியாற்றிய போது, 60-க்கும் மேற்பட்ட மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலரான, முன்னாள் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டவுட் தனபாலு: ஆசிரியர் என்றால், மற்றவர்கள் பின்பற்றும் வகையில் ஒழுக்க சீலராகத் திகழ வேண்டும். அந்த எண்ணமெல்லாம், இப்போதைய ஆசிரியர்கள் பலருக்கும் வரவே வராது என்பதை, சமீபத்திய 'போக்சோ' வழக்குகள் சுட்டிக் காட்டுகின்றன. டில்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரசை எதிர்த்து, வீதியில் வந்து போராடிக் கொண்டிருக்கும் மார்க்., கம்யூ., மூத்த தலைவி பிருந்தா காரத், இவ்விஷயத்தில் வாய் மூடி மவுனம் காப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை.
பத்திரிகை செய்தி: பா.ம.க., அரசியல் பயிலரங்கம் இன்று முதல் துவங்கி உள்ளது. அதற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.
டவுட் தனபாலு: பயிலரங்கம் நடத்துவதெல்லாம் இருக்கட்டும்... அதில் என்ன சொல்லிக் கொடுக்கப் போறாங்க, சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள் சரியானதா, லாபம் ஈட்டித் தருமா என்பது குறித்து, யார் கேள்வி எழுப்பப் போறாங்களோ தெரியலை... கையில காசு, வாயில வடை, பிரியாணின்னு விஷயம் முடிஞ்சிடாம, ஆக்கப்பூர்வமா, பலன் அளிக்கக் கூடியதா இருக்குமாங்கிறது தான், மிகப் பெரிய, 'டவுட்!'
கவுன்சிலர், மேயர் என்று பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து விட்டோம் என்று பீற்றிக்கொள்ளும்போதே, உறவினர்கள் தான் - வீட்டில் உள்ளது போலவே - ‘ஆளப்போகிறார்கள் என்பது தெரிந்ததுதானே இவர் கட்சி கவுன்சிலர்கள் மட்டும் என்ன யோக்கியம்