Load Image
dinamalar telegram
Advertisement

'நீங்க வேற ஏன்யா படுத்துறீங்க!'

'நீங்க வேற ஏன்யா படுத்துறீங்க!'



தமிழக கவர்னர் ரவி, சமீபத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பை விமர்சித்து பேசியதை கண்டித்து, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில், சில குட்டி அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்க, அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
எனினும் முன்னெச்சரிக்கையாக, ஏ.டி.எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ் தலைமையில், 25க்கும் மேற்பட்ட போலீசார், காலை 10:00 மணி முதல் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர்.அப்போது, சில அமைப்புகளின் நிர்வாகிகள், 10 பேர் மட்டும் வந்தனர். அவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தாமல், எதிரே உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ, வடை சாப்பிடும் பணியில் மும்முரம் காட்டினர்.

கால் வலிக்க காத்திருந்த போலீசார், ஒரு கட்டத்திற்கு மேல், 'ஆர்ப்பாட்டம் நடத்துறீங்களா... இல்லையா?' என, அவர்களிடமே சென்று கேட்க, 'அதெல்லாம் ஒன்றும் இல்லை சார்... நாங்க சும்மா வந்தோம்...' என, அவர்கள் பதிலளித்தனர்.
கடுப்பான போலீசார், 'அடிக்கிற வெயில்ல நீங்க வேற ஏன்யா படுத்துறீங்க...' என, புலம்பியவாறே நடையை கட்டினர்.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement