dinamalar telegram
Advertisement

கட்சி தாவும் 47 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்?

Share

''ஊட்டி சுற்றுவட்டார கோவில்கள்ல தடபுடலா ஏற்பாடு நடக்குதுங்க...'' என, அந்தோணிசாமி பேச்சை ஆரம்பிக்கவும், டீயுடன் வந்தார் நாயர்.

''என்ன விசேஷம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கோடை விழாவுல கலந்துக்க, முதல்வர் ஸ்டாலின் 19ம் தேதி ஊட்டி போறாரு... அரசு விருந்தினர் மாளிகையில தங்கி ஓய்வெடுக்கிறாருங்க...

''மறுநாள், 20ம் தேதி மலர் கண்காட்சியை திறந்து வச்ச பிறகு, ஊட்டியை உருவாக்கிய ஆங்கிலேயர் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைக்கிறாருங்க... 21ம் தேதி தான் ஊட்டியில இருந்து புறப்படுறாரு...

''முதல்வரோடு அவரது குடும்பத்தினரும் போறாங்க... அவங்க, ஊட்டி மற்றும் கோத்தகிரியில இருக்கிற சில கோவில்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் போக ஏற்பாடுகள்
நடக்குதுங்க...

''முதல்வரின் குடும்பத்தாருக்கு சொந்தமான ஊட்டி பங்களாவுல, அவரது உறவினர்கள் வந்து, உள்ளூர் கட்சி நிர்வாகிகள் துணையுடன், இதுக்கான ஏற்பாடுகளை செய்துட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அமைச்சர் கொந்தளிச்சிட்டாருல்லா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அண்ணாச்சி.

''யாரு, எதுக்குன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கூட்டுறவு பண்டக சாலை, பல்பொருள் அங்காடிகள், ரேஷன் கடைகள் எல்லாம் கூட்டுறவுத் துறையின் கீழ செயல்படுதுல்லா... ஒவ்வொரு பண்டக சாலையிலும் கட்சி சார்ந்த, சாராத
தொழிற்சங்கங்கள் இருக்கு வே...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த கட்சி தொழிற்சங்கத்தினரின் அடாவடி அதிகமாயிட்டு... அவங்க சொல்ற ஆட்களுக்கு, 'டிரான்ஸ்பர்' போடச் சொல்லி கேட்காவ வே... ரேஷன் கடைகளை கண்காணிக்கிற, 'ஏரியா மேனஜர்' பதவி வேணும்னு அதிகாரி
களுக்கு நெருக்கடி தர்றாவ...

''இந்த தகவல், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமியின் காதுக்கும் போயிட்டு... புகாருக்கு ஆளான தொழிற்சங்கத்தினரை கூப்பிட்டு,
'நிர்வாகத்துல தலையிட்டு, வேண்டாத வேலை பார்த்தீயன்னா நடக்கிறதே வேற'ன்னு சத்தம் போட்டு அனுப்பிட்டாரு வே...''
என்றார், அண்ணாச்சி.
''ஆளுங்கட்சிக்காரா அரண்டு போயிட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''அவங்களுக்கு என்னப்பா பிரச்னை...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''அமைச்சர்கள் மூணு பேரை மாத்தப் போறதா, சமீபத்துல பேச்சு அடிபட்டது ஓய்... உடனே, சமீபத்துல இலாகாவை இழந்த அமைச்சர், அமலாக்கப்பிரிவின் கழுகுப் பார்வையில இருக்கற இன்னொரு அமைச்சர் உட்பட 47 எம்.எல்.ஏ.,க்கள் அதிரடியா, பா.ஜ.,வுல இணைய பேச்சு நடத்தறதா, சமூக வலைதளத்துல ஒரு தகவல் தீயா
பரவிடுத்து ஓய்...

''பதறிப் போன ஆளுங்கட்சியினர், எம்.எல்.ஏ.,க்களிடம் விசாரிச்சிருக்கா... 'அதெல்லாம் ஒண்ணுமில்ல... அமைச்சரவை மாற்றத்துல தங்களது பேரு சிக்கிடக் கூடாதுன்னு சில அமைச்சர்கள் கிளப்பிவிட்ட வதந்தி தான் இது'ன்னு சொன்னாளாம் ஓய்...'' என முடித்தார்,
குப்பண்ணா.

''நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் புறப்பட்டனர்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • kumar - Erode,இந்தியா

    டிக்கெட்டுக்கு காசில்லாமல் திருட்டு ரயில் ஏறி வந்த தலைவர் அடாவடியில் திளைத்த அவர் மகன் அவர் குடும்பத்தினருக்கு ஊட்டியில் சொகுசு பங்களா தமி நாடெங்கும் ஏராளமான சொத்துக்கள் ஆனா இவர்கள் சாமானியர்கள் சாமானியர்களுக்கு உழைப்பவர்கள் - எதையும் நம்பும் ஒரு கூட்டம் அறுபது வருடங்களாக நாட்டில் இருப்பதனால் இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முதல்வர் அரச பயணம் போவார், குடும்பம் ஆன்மீகப்பயணம் போகும் காவல்துறை முதல் எல்லாரும் அவர்களுக்கு ஏவல் செய்ய போவார்கள் குண்டர், கொள்ளையர்கள் கும்மாளமாக கைவரிசை காட்ட பிளான் போட்டு விட்டிருப்பார்கள்

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    கூடிய விரைவில் மக்கள் நலன் காக்கும் அதிகாரம் வரும் வாய்ப்பு உள்ளது

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement