Load Image
dinamalar telegram
Advertisement

விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம்!

மிக மோசமான விபத்தில் இருந்து மீண்ட, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும், 'மாரத்தான்' ஓட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். அவர் தன் அனுபவம் பற்றி கூறியதாவது: விபத்துக்கு பின் சிகிச்சை முடிந்து, வீட்டுக்கு எதிரில் உள்ள பூங்காவில் நடை பழகினேன்; பின், யோகா கற்றேன்.

நாளடைவில் என் நடைபயிற்சி ஓட்டப் பயிற்சியானது. முதல் முறையாக, ௨௦௧௪ல், புதுச்சேரி ஆரோவில்லில் நடந்த மாரத்தானில் பங்கேற்றேன்.அது, ௨௧ கி.மீ., துார மாரத்தான் என்பதால், என்னால் ஓட முடியுமா என்ற டென்ஷன் வேறு. ஆனாலும், ௨௧ கி.மீ., துாரத்தை, நான் இரண்டரை மணி நேரத்தில் ஓடிக் கடந்த போது, எனக்கே வியப்பாக இருந்தது.திருநெல்வேலியில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற போது, ௧௬ கி.மீ., கடந்த நிலையில், என் காலில் சதைப் பிடிப்பு ஏற்பட்டு, கணுக்கால் பகுதி இறுகி, கல் போலானது.மீதி துாரத்தை கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை என்று கடந்தேன். ஓடி முடித்த நிலையில் என்னால் கை, கால்களை அசைக்க கூட முடியவில்லை. பின், ஐஸ் கட்டியால் நண்பர்கள் ஒத்தடம் கொடுத்தனர். ஆனாலும், வலி குறையாமல் அதிகரித்தது.உடனே, லண்டனில் மருத்துவராக இருக்கும் என் மகனுக்குத் தகவல் கொடுக்க, அவன் குடிநீரில் உப்பும், எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கும்படி ஆலோசனை கூறினான்.நானும் அப்படியே செய்தேன்; அதன்பின் வலி படிப்படியாக குறைந்தது.


நீண்ட துாரம் ஓடும் போது, உடலில் உப்புச் சத்து குறையும்; தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், சிறுநீரகத்தில் கல் அடைப்பு பிரச்னை வரும்.எனவே, ஓடும் போது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை உடன் எடுத்துச் சென்று தேவைக்கேற்ப அடிக்கடி குடிக்க வேண்டும். கடந்த, ௨௦௧௪ல் துவங்கி, இதுவரை, ௧௨௫க்கும் அதிகமான மாரத்தான் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றுள்ளேன். என் சாதனை, இந்திய சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம் போன்றவற்றில் இடம் பெற்றுள்ளது. சாலை விபத்தில் உயிர் பிழைத்த என்னிடம், 'தரையில் சம்மணமிட்டு உட்காரக் கூடாது. வேகமாக நடப்பது, ஓடுவதை அறவே தவிர்க்க வேண்டும்' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். அதை மீறி, இன்று இத்தனை மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்று சாதனை புரிய முடிந்துள்ளது என்றால், அதற்கு மூன்று காரணங்களைத் தான் என்னால் சொல்ல முடியும். அவை தான், மன உறுதி, விடாமுயற்சி, தொடர் பயிற்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • sankar - chennai,இந்தியா

    வாழ்த்துக்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement