Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக சட்டசபையில் அதிக கேள்விகளை எழுப்பி, முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டசபையில் அதிக எண்ணிக்கையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தது பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தான். அவையில் முழு நேரம் இருந்தவரும் அவர் தான். மக்கள் நலனில் பா.ம.க., கொண்டுள்ள அக்கறைக்கு சட்டசபை செயல்பாடுகளே சாட்சி.


டவுட் தனபாலு: மக்கள் நலனில் அக்கறையோட செயல்படுவதற்கு பாராட்டுக்கள்... அதே நேரம், ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளை விட, முதல்வருக்கு பாராட்டு மழை பொழிந்ததிலும், தங்களது கட்சியினர் தான் முன்னணியில் இருந்தனர் என்பதிலும் எந்த, 'டவுட்'டும் இல்லை!



முதல்வர் ஸ்டாலின்: இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் கீழ், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், 5,000 நிறுவனங்கள், தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழகத்தின் தற்போதைய ஏற்றுமதி அளவு 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதை, 2030க்குள், 7.72 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.



டவுட் தனபாலு: தொழில் நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்பட, 24 மணி நேரமும் தடைபடாத மின்சாரம் தேவை... 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, மின் தடையும் சேர்ந்து வந்துடும்'கிறது எழுதப்படாத விதியா இருக்குது... இந்த அவப்பெயரை நீக்க போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்தாலே, ஏற்றுமதி இலக்கு கண்டிப்பாக பூர்த்தியாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
: 'அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த நிலையில், அதிலிருந்து தி.மு.க.,வினர் நழுவுகின்றனர். அந்த திட்டம் என்னவானது என, அக்கட்சியிடம் தான் கேட்க வேண்டும.


டவுட் தனபாலு: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம்'னு 2016 சட்டசபை தேர்தலப்ப, உங்க தலைவி ஜெயலலிதாவும் தான் வாக்குறுதி தந்தாங்க... அவங்க, அப்புறம் நீங்க, பழனிசாமி எல்லாம் முதல்வர்களா இருந்தும், அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காம இருந்துட்டு, தி.மு.க., அரசை நோக்கி விரல் நீட்டலாமான்னு தான், 'டவுட்' வருது!

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • sethusubramaniam - chennai,இந்தியா

    முதல்லே தொழிற்சாலைகளை உங்க கட்சி அல்லக்கைகள் மற்றும் லஞ்ச அதிகாரிகள் கிட்டேயிருந்து காப்பாத்துங்க . இதுக்கு பயந்து இருக்கற நிறுவனங்களும் தமிழகத்தை விட்டுப் போயிடும்போலே இருக்கு .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தேர்தல் வாக்குறுதிகளில் தங்களுக்கு 'வருமானம்' இல்லாத எதையும் தொடக்கூட மாட்டார்கள் என்பது இரு கட்சிக்கும் பொது தானே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement