ஏப்ரல், 6, 1815
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 ஏப்ரல், 6ல், திருச்சி அருகில் எண்ணெயூரில், சிதம்பரம் பிள்ளை - அன்னத்தாச்சி தம்பதியின் மகனாக பிறந்தார். காஞ்சிபுரம் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்டோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார்.சிறுவயதிலேயே செய்யுள் இயற்றுவதில் வல்லவரானார். இவர், தலபுராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கலம்பகம், கோவை உள்ளிட்ட சிற்றிலக்கிய வகைகளில், ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். அச்சானவை, 75 நுால்கள் மட்டுமே. இவரின், பெரியபுராண சொற்பொழிவு அக்காலத்தில் மிகவும் பிரபலம்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் தலைமை புலவராக இருந்தார். இவரது திறமைக்காக, 'மகாவித்வான்' பட்டத்தை வழங்கினார் அம்பலவாண தேசிகர். 'திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' என்ற பெயரில், இவரின் வாழ்க்கையை இரண்டு தொகுதிகளாக எழுதியுள்ளார் உ.வே.சா.,தமிழ் தொண்டர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1876 பிப்., 1ல், தன் 61வது வயதில் மறைந்தார்.
மகா வித்வானின் பிறந்த தினம் இன்று!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!