Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கம் மற்றும் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது. தி.மு.க.,வினரின் வசூல் வேட்டையை பார்த்து, வீட்டு உரிமையாளர்களும், வியாபாரிகளும் கலக்கம் அடைந்து உள்ளனர். எனவே, முதல்வர் தலையிட்டு, பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில், அவர்களின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை தடுக்க வேண்டும். மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

டவுட் தனபாலு: இதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தா, இப்பிரச்னையை வேற மாதிரி, 'டீல்' செய்து, ஆளுங்கட்சியை அலற விட்டிருப்பாங்க... பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான நீங்க, 'அறிக்கை அரசியல்' மட்டும் செய்றதை பார்த்தா, 'மடியில் கனம் இருக்கு; அதனால், ஆளுங்கட்சியிடம் பயம் இருக்குது' என்ற, 'டவுட்'டை தான் ஏற்படுத்தும்!


பத்திரிகை செய்தி:
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பழங்களில் இருந்து மது தயாரிக்கும் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, முந்திரி, பலா, அன்னாசி, வாழை பழங்களில் இருந்து, குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், 10 ஆண்டுகளான ஐ.டி., நிறுவனங்களில், பார்கள் நடத்த அனுமதி வழங்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


டவுட் தனபாலு: கேரளாவை கடவுளின் தேசம்; கல்வியறிவில் முன்னணியில் இருக்கும் மாநிலம் என்றெல்லாம் பெருமை பேசுவாங்க... படித்தவர்கள் எண்ணிக்கையை உயர்த்த இடதுசாரி அரசு முடிவு எடுக்கும்னு பார்த்தா, குடிப்பவர்கள் கூட்டத்தை அதிகரிக்க அல்லவா திட்டம் தீட்டி செயல்படுறாங்க... மக்கள் நல அரசுன்னு சொல்லிக்கிற தகுதியை, தோழர்கள் படிப்படியா இழந்துட்டு வர்றாங்க என்பதில் எள்ளளவும், 'டவுட்' இல்லை!


ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு:
தமிழகத்தில், 300 கோவில்களில் அறங்காவலர்கள் குழு நியமிக்க, தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெற்று வருகிறோம். இதற்காக, உயர்மட்ட குழு அமைத்துள்ளோம். இந்தாண்டு இறுதிக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர். இதன் ஒரு பகுதியாக, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் அறங்காவலர்களை நியமித்துள்ளோம்.


டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... அதே நேரம், உள்ளாட்சி தேர்தல்ல சீட் குடுக்க முடியாத உங்க கட்சியினரை திருப்திபடுத்துறோம்; கூட்டணி கட்சியினரை கூல்படுத்துறோம்னு சொல்லி, பொத்தாம் பொதுவா யாரையும் அறங்காவலர்களா நியமிச்சுடாதீங்க... ஆன்மிகத்துலயும், ஹிந்து சமயத்துலயும் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் உள்ளவங்களா தேர்ந்தெடுத்து எந்த, 'டவுட்'டுக்கும் இடம் தராம நியமிச்சா நல்லாயிருக்கும்!

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    அறங்காவலர்கள் கோவில் சொத்தை களீபரம் செய்யப்போவதும் குத்தகை தார்களை மிரட்டபோவதும் உறுதி..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆன்மிகம், இந்து சமயப்பற்று, இந்த மாதிரியெல்லாம் எதிர்பார்க்கக்கூட தகுதியில்லையே நமக்கு நடப்பது யார் ஆட்சி?

  • sankar - சென்னை,இந்தியா

    அம்மாஜியின் ஆட்சிக்காலத்திலேயே பெரிய பெரிய விஐபி க்கள் ரவுடிகள் வைத்து தாக்கப்பட்டது தெரியாதா? இரண்டும் திராவிட மாடல் கட்சி மட்டைகள் தான்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement