'ராஜு விஞ்ஞான பூர்வமா பேசுவாரு!'
மதுரையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி அளித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடிக்கடி சோதனை நடத்துவது குறித்த கேள்விக்கு, 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால், 'ரெய்டு' நடத்தப்படுகிறது' என்று பதிலளித்தார்.
ஒரு நிருபர், 'உங்கள் வீட்டிற்கும் ரெய்டு வந்தால்...' என கேட்க, அதற்கு சிரித்தவாறே, 'ரெய்டு வந்தா வரட்டும். எனக்கு எந்த கவலையும் இல்லை. அரசியலில் பல சோதனைகளை கடந்தவன் நான்.10 ஆண்டுகளாக கூட்டுறவு அமைச்சராக இருந்து, நான் எந்த தவறும் செய்யவில்லை' என, சுயபுராணம் பேச ஆரம்பித்தார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இவரு எந்த தவறும் செய்யலைன்னா, மற்ற முன்னாள் அமைச்சர்கள் தப்பு செஞ்சிருக்காங்கன்னு இவரே ஒத்துக்கிறாரா...' என 'கமென்ட்' அடிக்க, 'நம்ம ராஜு எப்பவுமே இப்படி தான் விஞ்ஞான பூர்வமா பேசுவாரு...' என, மற்றொரு நிருபர் கூற, அனைவரும் சிரித்தனர்.
ஒரு பழமொழி உண்டு, 'வாத்தியார் சம்சாரம், மூத்தவளே …….' என்று. இதை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாமா ?