மிருகம், ஈரம், அரவாண், சமீபத்தில் வெளியான கிளாப் போன்ற படங்களில் நடித்த ஆதி பினிஷெட்டி அளித்த பேட்டி:
தமிழில் உங்களை அதிகம் காணோமே...
மொழியை மட்டுமே வைத்து பாத்திரத்தை தேர்வு செய்வதில்லை. எனக்காக ஒரு பாத்திரத்தையோ, பிம்பத்தையோ நான் உருவாக்கவில்லை. கதையை நம்பியே நான் நடிக்கிறேன்.
அதன் பின் தான் மொழி. தமிழில் நாயகனாக மட்டுமே நடிப்பீர்களா?
லிங்குசாமி இயக்கும் தி வாரியர் படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.
'மரகத நாணயம்' போன்ற காமெடி படம் மீண்டும் எப்போது?
மரகதநாணயம் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும். பார்ட்னர் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். யோகிபாபு, ரோபோ சங்கர், பாண்டியராஜன் என காமெடி பட்டாளமே இருக்கிறது.ஹன்சிகா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அனைத்து தரப்பினருக்கும் சென்று சேரும் படமாக இருக்கும்.
எதிர்கால சினிமா...
எனக்கு புரிந்தவரை, ரசிகர்கள் எல்லா படங்களையும் பார்க்கின்றனர். அனைத்து தரப்பு ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டியுள்ளது.இன்னும் முழுவதுமாக மக்கள் தியேட்டர் பக்கம் வரவில்லை. ஓ.டி.டி.,யில் படம் எப்படியும் வந்து விடும் என்ற எண்ணமும் மக்களிடம் உள்ளது.
கிளாப் படம் பற்றி சொல்லுங்கள்!
கிளாப் படம் இளையராஜாவை ரொம்பவே ரசிக்க வைத்துள்ளது. இந்தப் படத்தில் சில காட்சிகளில் பின்னணி இசையே இருக்காது. 'ஒரு காட்சிக்கு வலுசேர்ப்பதாக பின்னணி இசை இருக்க வேண்டும். நிறைய காட்சிகளுக்கு இசைக்கான அவசியமே இல்லாமல் இருந்தது' என்றாராம், இளையராஜா.அம்மாவுக்கு கிளாப் போன்ற சீரியஸான படங்கள் பிடிக்காது.
ஆனால், அப்பா அப்படியில்லை. அவர் சினிமாவில் இருப்பதால் என்னை ஊக்குவிப்பார்.
கிளாப் படம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம்...
தேசிய அளவிலான போட்டிகளில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்கு முக்கியத்துவம் குறைவு தான். கிளாப் படத்தில் நடித்த போது, அத்லெடிக்ஸ் பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது. இப்படத்திற்கு பின் நிறைய அத்லெடிக்ஸ் எங்களை பாராட்டினர். சில நிமிடம் ஓடும் போட்டிக்காக, ஆண்டு முழுவதும் பயிற்சி எடுக்கும் அத்லெடிக்சுக்கு ஏற்படும் கடைசி நிமிட தோல்வி, மிகப்பெரிது. இவர்களுக்கும் கிரிக்கெட்டை போல் அங்கீகாரம் வேண்டும்.
-நமது நிருபர்-
சிறப்பு - அறிவார்ந்த பேட்டி