Load Image
dinamalar telegram
Advertisement

கலக்கல் மாடல் காயத்ரி

இரு விழிகளில் நின்றாடும் மான் கூட்டங்கள்... வரி இதழ்களில் திண்டாடும் தேன் துளிகள்... தென்றல் தொட்டு இழுத்து வரும் அழகு தேர், இருந்தும் இல்லாத இடை ஒரு கானல் நீர், சிரிக்கையில் சிலிர்க்கும் விண் மேகங்கள், நடக்கையில் கேட்கும் அபூர்வ ராகங்கள் என... அழகின் அழகியாக வலம் வரும் கலக்கல் மாடல் காயத்ரி பேசுகிறார்...

காயத்ரி சபாவின் அறிமுகம் ?



எனக்கு சொந்த ஊர் சென்னை. ஆனால் அங்கு உறவினர்கள் அதிகம் இல்லாததால் கோவை வந்தாச்சு. ரியாலிட்டி ஷோக்களில் டான்ஸராக இருக்கிறேன். இதோடு பலவிதமான மாடல், பேஷன் போட்டோ ஷூட்டும் பண்றேன்.

என்ன மாதிரி மாடலிங் ஷூட் பண்ணுவீங்க?



மூன்று ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கும் நான் பிரன்டட், ஆட், பியூட்டி பார்லர், கான்சப்ட், காஸ்ட்டியூம் டிசைனர் என பல துறையினருடன் இணைந்து போட்டோ ஷூட்ஸ் பண்றேன்.

பேஷன், மாடலிங்கில் வாங்கிய விருதுகள்?



2019ல் சென்னையில் நடந்த மிஸ் மெட்ரோ பேஷன்னில் ரன்னர் அப், பெஸ்ட் ஆட்டியூட் இன் மெட்ரோவில் ஒரு விருது, மிஸ் ஜூலியட்டில் டைட்டில் வின்னர், 2018ல் ஈரோட்டில் நடந்த போட்டோஜீனிக் ஆப் ஈரோடில் ஒரு விருது வாங்கியிருக்கேன்.

உங்கள் மாடலின் ஸ்டைல் என்ன ?



ஸ்டைல் என திட்டமிட்டு பண்றது இல்லை. பல மாடல்கள் டிரடிஷனல் ஷூட் பண்றாங்க. நான் ஷூட்டுக்கு ஏற்ப என்னை நானே மாற்றி விடுவேன். இன்ஸ்டாவில் ஒரு போட்டோ போஸ்ட் பண்ணினால் ரீச் ஆகணும். அதனால் ரிஸ்க் எடுத்து ஷூட்ஸ் பண்ணுவேன். அடுத்தவர்கள் என்ன நினைனப்பாங்கனு யோசிக்க மாட்டேன்.

மாடலிங், டான்ஸ் தவிர வேறு திறமைகள்?



ரியாலிட்டி ஷோவில் டான்ஸ் ஆடியிருக்கேன். இதுவரை 8 ஆல்பம் சாங்ஸ், 4 பைலட் மூவி நடிச்சிருக்கேன் சமூகத்தில் சமூக வலைதள குற்றங்களை பேசும் பெய்ட் கால் என்ற பைலட் மூவி எனக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் கிளாமர், திரில்லர் இருந்ததால் ஆரம்பத்தில் பயந்தேன். பிறகு போல்டாக நடித்துவிட்டேன்

உங்கள் பிட்னஸ் ரகசியங்கள் ஏதாவது...?



அதெல்லாம் எந்த ரகசியங்களும் இல்லை... நல்லா சாப்பிடுவேன் வெயிட் போட்டா மட்டும் தான் பிட்னஸ் பண்ணுவேன். குறிப்பாக எப்பவும் சிரிச்சிகிட்டே இருப்பேன். என்னை நான் ரொம்ப லவ் பண்றேன். இப்படி இருந்தாலே உடம்பும், மனசும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாடலிங் துறையில் சந்தித்த பிரச்னை ?



நிறைய பிரச்னைகளை சந்தித்து தாண்டி தான் போறேன். தவறான எண்ணம் கொண்டவர்களை ஈஸியாக கண்டுபிடிச்சிடுவேன். வாய்ப்புகளை தேடி அலைய மாட்டேன். கிடைக்கிறது கிடைக்கட்டும் என இருப்பேன். ஒரே நாளில் யாரும் நயன்தாரா, திரிஷாவாக முடியாது தானே...
ஸ்ரீனி

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement