Load Image
dinamalar telegram
Advertisement

எம்.எல்.ஏ.,வுக்கு 'செக்' வைக்கும் தி.மு.க., பிரமுகர்!

எம்.எல்.ஏ.,வுக்கு 'செக்' வைக்கும் தி.மு.க., பிரமுகர்!''லஞ்சம் வாங்க சொல்லி, 'டார்ச்சர்' பண்ணுதாங்க வே...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், அண்ணாச்சி.

''எந்த அதிகாரியை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்துல ஒரு பெண் அதிகாரி, தன்கிட்ட வர்ற சொத்து வரி, குடிநீர் பெயர் மாற்றம் விண்ணப்பங்களுக்கு 10 ஆயிரம், 20 ஆயிரம்னு லஞ்சம் கேட்குறாங்க வே...

''இந்த பணத்தையும் அவங்களா கேட்டு வாங்க மாட்டாங்க... கிளர்க், பில் கலெக்டர்களிடம் லஞ்சப் பணத்தை வசூல் பண்ணி, தன்னிடம் தரும்படி நெருக்கடி தர்றாவ வே...

''இவங்க நெருக்கடியால, சமீபத்துல புதுசா வேலைக்கு சேர்ந்த ஒரு பெண் ஊழியர், கையை அறுத்து, தற்கொலைக்கு முயற்சி
பண்ணிட்டாவ வே...

''ஆனா, கமுக்கமா பேசி, பிரச்னையை அமுக்கிட்டாவ... அதுக்கு பிறகும் பெண் அதிகாரி திருந்தலை... ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் உறவினரிடமே பணம் கேட்க, அவரு கொந்தளிச்சிட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.
ரேடியோவில் ஒலித்த, 'ஆனந்தம் வந்ததடி ஆனந்தி...' என்ற பாடலை ரசித்தபடியே, ''இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''பொள்ளாச்சி தி.மு.க., முக்கிய புள்ளிகள், சமீபத்துல, நகராட்சி அதிகாரிகளை சந்திச்சு பேசினாங்க... அப்ப, 'ஆட்சி அதிகாரம் எங்களிடம் இருக்குது... ஆனா, தள்ளுவண்டி கடைக்காரங்க, எங்களை பார்க்க வராம பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை பார்க்கிறாங்க... உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சதும், அவங்களை
கவனிச்சுக்கலாம்...

''அதே மாதிரி, பாதாள சாக்கடை திட்டத்துல, வீட்டு இணைப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கிறீங்க... இதை எல்லாம் தேர்தல் வரை நிறுத்தி வையுங்க... அப்புறமா பார்த்துக்கலாம்'னு 'ஆர்டர்' போட்டிருக்காங்க பா...

''தேர்தல்ல ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே இப்படின்னா, ஜெயிச்சிட்டா என்னாகுமோன்னு அதிகாரிகள் எல்லாம் வெலவெலத்து போய் கிடக்கிறாங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.

''எம்.எல்.ஏ.,வுக்கே செக் வச்சிட்டாருங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சென்னைக்கு பக்கத்துல ஜெயில் இருக்கிற ஊராட்சி ஒன்றியத்துல, ஆளுங்கட்சி பெண் தான் தலைவரா இருக்காங்க... ஆனா, இவங்க கணவர் தான், ஒன்றிய ஆபீசுக்கு வந்து
நிர்வாகத்தை கவனிக்கிறாருங்க...

''அ.தி.மு.க., ஆட்சியில், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்பனை செய்தாங்க... இதுக்கெல்லாம், சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி, பெண் தலைவரின் கணவர் அனுமதியை அள்ளி குடுத்திருக்காருங்க...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முறைகேடா பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் பற்றி தகவல்களை தோண்டி எடுத்தாங்க... ஆனா, ஆளுங்கட்சி பிரமுகர் சம்பந்தப்பட்டது தெரிஞ்சதும், நடவடிக்கை எடுக்காம கிடப்புல போட்டுட்டாங்க...

''இது போக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில பணிகள் செய்யவும், 'கமிஷன்' கேட்டு முட்டுக்கட்டை போடுறாருங்க... இதனால, இந்த வருஷம் மட்டுமில்லாம, முந்தைய வருஷங்கள்ல தொகுதி மேம்பாட்டு நிதியில ஒதுக்கிய பணிகளை கூட முடிக்க முடியாம, எம்.எல்.ஏ.,வும், அதிகாரிகளும் திணறிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''திருமால் வீடு வரைக்கும் போவணும்... கிளம்புதேன்...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆஹா, 'திருமால் பெருமையும்' ஆனந்த 'ராகமும்' பாடி விட்டீர்கள் விழ வேண்டியவர் காதுக்கு மட்டும் எட்டாதே

  • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

    தன்னுடைய கட்சி உறுப்பினர் தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய முதல்வர் திருமால் விஷயத்தில் என்ன பதில் சொல்லப்போகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement