dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல; மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பது போன்றது. இது கடும் கண்டனத்துக்குரியது.


டவுட் தனபாலு: 'முன்னே நீ சென்றால், பின்னே நான் வருவேன்' என்பதைப் போல, வேண்டுமென்றே சிலர், தகாத வழியில் சிலரை வழி நடத்துகின்றனர். அதற்கான உதாரணம் தான், இந்த அவமதிப்பு செயல். இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், நாடு சீரழியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: குடியரசு தின அணிவகுப்பில், சுதந்திரத்திற்காக போராடிய, உயிர்நீத்த வட மாவட்டங்களை சேர்ந்த தலைவர்களின் உருவச்சிலைகள் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.


டவுட் தனபாலு: எரியிற கொள்ளியிலே, எண்ணெய் ஊத்துறதுங்கிறது இது தான். கண்ணியமான முறையில் எதையும் அணுகி, வெற்றிகரமாய் விஷயத்தை முடிப்பீங்களா... சொத்தை சொள்ளை என குறை சொல்லியே வாழ்க்கையை நடத்துவீங்களா! 'டவுட்'டா இருக்கு சார் உங்க மேலே!


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
: 'அரியலுார் மாவட்டம், வடுகப்பாளையம் மாணவி, விடுதிக் காப்பாளர் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதற்குக் காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்.


டவுட் தனபாலு: ஏன் இந்த காலம் தாழ்ந்த அறிக்கை? பா.ஜ.,வின் வீச்சு கூட, உங்கள் கட்சியினரிடமும், உங்களிடமும் தென்படவில்லையே! ஓங்கி எதிர்க்குரல் கொடுத்தால், புழல் பக்கம் போய்விடுவோம் என்ற பயம் உங்க எல்லாருக்கும் தொத்திடிச்சோன்னு, 'டவுட்' எழுகிறது!

Share
Advertisement

Home வாசகர் கருத்து (5)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ஏற்கெனவே 'கொடநாடு' குடைச்சல் ரெயிடுன்னு நொந்து கிடக்கிறோம் நம் பங்குக்கு ஒரு கல்லை வீசிவிட்டுப் போகலாம் என்ற விட்டேற்றி அறிக்கை பாம்பும் சாகாமல், கம்பும் முறியாமல் …… சாமர்த்தியம்தான்

 • Suppan - Mumbai,இந்தியா

  உண்மையை முழுவதும் சொன்னால் இவருக்கும் ஒட்டுப் பிச்சை கிடைக்காமல் போகுமோ என்ற பயமாக இருக்கும்.

 • Sourirajan Raghuraman - BENGALURU ,இந்தியா

  உலக நாயகரே அன்று நீங்கள் சினிமா தியேட்டர்களில் தேசீய கீதம் பாடும்போது நிற்க வேண்டும் என்பதைப்பற்றி ஒரு விவாத மேடையில் விமர்சித்ததை நாங்கள் மறக்கவில்லை. உங்கள் வாதத்திற்கு ஸ்மிதி இராணி கொடுத்த பதிலடியையும் மறக்கவில்லை. அதற்கு உங்களிடம் பதில் இல்லாமல் முழித்ததையும் மறக்கவில்லை. இன்றைய உங்கள் ஓலம் சந்தர்ப்பவாதம். உங்கள் விவாத வீடியோ இப்போதும் யூ டியூபில் கிடைக்கும்.

 • sankar - Nellai,இந்தியா

  "தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பது போன்றது"- ஆனால் ஜெய் ஹிந்த் அவமதிப்பின்போது வாய் திறக்கவில்லையே

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  ஏதோ தன் பங்கிற்கு கண்டனம் தெரிவிப்பதோடு அல்லாமல், தகாத வழியில் சிலர் வழிநடத்தப்படுவதை சுட்டி காண்பிக்கிறார் கமல்.. அதிகாரிகளின் படம் அதை நன்கு சித்தரிக்கிறது....எதிர்க்கும் தோரணை.. என்ன கோபக்கனல் கண்களிலிருந்து... இவர்கள் மாநில மொழியை மதிக்கிறவர்களாம்.. கமல், சரியா சொன்ன .... இப்படியிருந்தால் நாடு சீரழியும்....'டவ்ட்' இல்லையப்பா....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement