அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
உயரமான பறவை
பறவைகளில் உயரமானது நெருப்புக்கோழி. இதன் உயரம் 6 - 9 அடி. ஆயுட்காலம் 30 - 40 ஆண்டுகள். உலகில் அதிக எடை உள்ள பறவையாகவும் உள்ளது. எடை 63 - - 145 கிலோ வரை இருக்கும். இதற்கு பற்கள் இல்லை. ஒரே தாவலில் 16 அடி தாவும். மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் ஓடும். ஆனால் இவற்றால் பறக்க இயலாது. ஆண் நெருப்புக் கோழி ஆறு அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட குழிகளைத் தோண்டும். இதில் பெண் நெருப்புக்கோழி முட்டை இடும். இரவில் ஆண் பறவையும், பகலில் பெண் பறவையும் முட்டைகளை அடைகாக்கும்.
தகவல் சுரங்கம்
மூன்றாவது நீளமான ஆறு
முழுவதும் இந்தியாவில் பாயும் நதிகளில் கோதாவரி, கிருஷ்ணாவுக்கு அடுத்து நீளமான நதி நர்மதா. இது 'குஜராத், மத்தியபிரதேசத்தின் வாழ்வாதாரமாக' விளங்குகிறது. இது மத்திய பிரதேசத்தில் விந்திய - சாத்பூர மலைகளுக்கு இடையே, அமர்கண்டக் சிகரத்தில் உற்பத்தியாகிறது. 1312 கி.மீ., துாரம் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. 20 கிளை நதிகள் உள்ளன. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் தபதி, மஹி, நர்மதா ஆறு முக்கியமானவை. குஜராத்தில் இந்த ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!