பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: கிறிஸ்துவ பள்ளிகள், மதம் மாற்றும் கேந்திரங்களாக மாறி விட்டதால், உடனடியாக மதம் மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கத்தை, ஹிந்து அமைப்புகள் மேற்கொள்ளும். அதற்கு, பா.ஜ., உறுதுணையாக இருக்கும்.
'டவுட்' தனபாலு: மதம் மாற்ற தடைச் சட்டம் அமலானால், இதுபோன்ற அட்டூழியங்கள் குறையும் என்பதில், 'டவுட்' இல்லை. எனினும், ஒன்றும் தெரியாத அப்பாவி ஹிந்துக்களை, காலம் காலமாக மதம் மாற்றி வரும் கும்பலை, சட்டத்தால் மட்டும் மாற்ற முடியாது... அவர்களின் மனமும் மாற வேண்டும்; அப்போது தான் பலன் கிடைக்கும்!
முதல்வர் ஸ்டாலின்: தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க, அனைத்து துறைகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ளேன். மாநில அரசு எடுத்த முயற்சிகளால், அந்த துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, என் அரசு, முழு ஒத்துழைப்பை வழங்கும்.
'டவுட்' தனபாலு: சாலை போக்குவரத்து தான், ஒரு நாட்டின் உயிர்நாடி. அது சரியில்லை என்றால், எந்த வளர்ச்சியும் இருக்காது... இது நன்கு தெரிந்தும், பெரிய அளவிலான சாலை திட்டங்களுக்கு, எட்டு மாதங்களாக தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனினும், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு உண்டு என முதல்வர் இப்போது தெரிவித்திருப்பது, வெறும் கண்துடைப்பாக இருக்குமோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ்: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தனியார் பள்ளியில், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது வருந்தத்தக்க விஷயம்; அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது. எனினும், தயவுசெய்து இதை அரசியல் ஆக்காதீர்கள். இதில் சட்டப்படி தீர விசாரிப்போம். முதல்வர் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார். விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
'டவுட்' தனபாலு: 'நீட்' தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்த அரியலுார் அனிதா உட்பட தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட பல மாணவர்களுக்கு உங்கள் கட்சியும், கூட்டணி கட்சிகளும், லட்சக்கணக்கில் நிதி கொடுத்து, அந்த விவகாரத்தை இப்போது வரை அரசியல் ஆக்கி வருகின்றன. ஆனால் இப்போது, உங்கள் அரசில், அதுபோன்ற சம்பவம் நடந்ததும், 'அரசியல் ஆக்காதீர்கள்' என்கிறீர்களே... இது எந்த வகையிலான நியாயமோ என்பதே, தமிழக மக்களின், 'டவுட்!'
'டவுட்' தனபாலு
வாசகர் கருத்து (6)
-
-
சேலம் சென்னை சாலை திட்டத்தை விடியல் தடுத்தது ஏன்?
-
காலம் காலமாக மதம் மாற்றி வரும் கும்பல் ன்னு நீங்களே சொல்றீங்க, அவர்களின் மனமும் மாற வேண்டும் னும் சொல்றீங்க. இது உங்களுக்கே முரண்பாடா தெரியல்ல? பலப்பல வருசமா பவர் CD குடுக்குற கும்பல், கோடிக்கணக்கில பணம் பாத்த கும்பல் மனம் மாறுமா? இனிமே நம்மள காப்பாத்திக்க நாமளே எறங்கி அடிச்சா தான் உண்டு.
-
தான் சார்ந்து இருக்கும் மாதத்தில் தீண்டாமை எனும் கொடிய நஞ்சு இருப்பதால் தான் அதில் இருந்து ஒன்றும் தெரியாத அப்பாவி ஹிந்துக்கள், காலம் காலமாக மதம் மாறி வருகிறார்கள் என்பதில், 'டவுட்' இல்லை
-
அவர்கள் தன் மதமாற்றம் செய்கிறார்களா இந்து மதத்தில் இல்லையா? அமெரிக்காவில் ஐஸ்கேன் அமைப்பு அங்கு உள்ள கிருதவர்களில் மாற்றவில்லையா? அதுக்கு அந்த நாடு சட்டம் பூதத்தை அதுவும் சனநாயக நாடு தானே?
-
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அவர்களுக்கு, தனக்கு வந்தால் ரத்தம். மற்றவர்களுக்கு தக்காளி சட்னி
அன்று ஒரு அனிதா இறந்தபோது குச்சுக்குடிசை வரை சென்று அந்த 'உடன்பிறவா சகோதரிக்காக' ஒப்பாரி வைக்க முடிந்தது இந்தப்பெண்ணோ, கழிவறை இடிந்து உயிரிழந்த பையனோ உடன்பிறக்கவில்லை அதனால் அவர்களுக்காக குரல் கொடுப்பது அரசியல் வகையைச் சேரும் சட்டம் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே